92 உங்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை என்னும் கருத்துப்பட பேசிவீட்டுத் தாழ்த்தப்பட்ட ஒருவர் வீட்டில் உணவருந்திவிட்டுச் சென்று தோழர் விட்டார். பிறகு காங்கிரசுச் சார்பாக அதே பகுதியில் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் பேச தோழர் சீனுவாசராவ் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் மீன்குழம்பு ஊற்றிப் பிசையப்பட்ட சோற்றை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு வந்து, தோழர் சீனுவாசராவ் அவர்களிடம் நீட்டிச் சாபபிடும்படியும், சாப்பிட்டால்தான் தங்களை அவர் சம மாக மதிப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறி னார். மீன் குழம்பின் வாடையையே அதுவரையில் நுகராத சீனுவாசராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரைச் சாப்பிட்டுக் காண்பிக்கும்படி கூட்டத்தினர் வற் புறுத்தத் தொடங்கினர். கூட்டம் குழப்ப நிலை அடைத் தது. சைவ உணவு சமைத்துப் போட்டால் வேறோர் நான் வந்து சாப்பிடுவதாக வாக்களித்துச் சென்றாராம். தாங்கள் சமத்துவ நோக்கம் கொண்டவர்கள்தாம் என்பதைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்குக் காண்பிக்க வேண்டி, வேண்டா வெறுப்போடு வேறு வழியில்லாமல், தோழர் சீனுவாசராவும் பிற காங்கிரசுக்காரர்களும் வேறோர்நாள் போய்ச் சைவ உணவைத் தாழ்த்தப்பட்ட தோழரி ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் காட்டினார்களாம் அறிஞர் அண்ணா அவர்களின் 'இளமைக்குறும்பு காங் கிரசுக்காரர்களை இப்படிப்பட்ட புறக்கணிக்க முடியாத தொல்லைகளுக்கு ஆளாக்கிற்று மன்றம், 15.8,55,
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
