பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டிபோடாப் பொறுமைப் பண்பு பொதுவாக அரசியல் உலகில், ஒரு குறிப்பிட்ட இடத் திற்கோ அல்லது நிலைக்கோ போட்டியும் மோதுதலும் ஏற்படுமாயின், எப்படியேனும் மோதுதலைத் தாண்டி, போட்டியில் வென்று அந்த இடத்தையோ அல்லது நிலை யையோ பிடிக்கவேண்டும் என்பது தான் பெரும்பாலோ ருடைய பண்பாக இருந்து வருகிறது. போட்டியும் மோது தலும் ஏற்படுமாயின், பிறர்க்கு விட்டுக்கொடுத்துவிட்டு விலகி நிற்கும் பண்பு மிகமிகச் சிலரிடத்தில்தான் காணப் படுகிறது. இந்த அரிய பண்பு களிடத்தில் மிகவும் தலைசிறந்து விளங்குவதை யாரும் எளிதில் கண்டுகொள்ளலாம். அறிஞர் அண்ணா அவர் எதையும் போட்டி போட்டுக்கொண்டு கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அறிஞர் அண்ணா அவர்களிடம் எப்பொழுதும் காணப்பட்டதில்லை. தம்மை ஒருவர் முந்த விரும்புகிறார் என்றால், அதற்கு இடங்கொடுத்து ஒதுங்கி நிற்பாரே ஒழிய போட்டி போட்டுக்கொண்டு முந்த ஒரு நாளும் ஒருப்பட்டதில்லை. ட நெருக்கடிக்கிடையே இடந்தேடும் பண்பு, எந்த வகையிலும் அறிஞர் அண்ணா அவர்களிடம் எப்பொழுதும் தலை தூக்கிய திலலை. பொதுவாகப் புகைவண்நயில் இட நெருக்கடி மிகவாக இருந்தால், புககலண்டியைத் தவறவிட் டாலும் விடுவார்களே ஒழிய இடித்துப்புடைத்துக்கொண்டு