பாடுவதில் தேறவில்லை அறிஞர் அண்ணா அவர்கள் பாட்டுப் பாடினார்கள்- அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் பாடி வார்கள் என்றால், பலரும் வியப்படையவே செய்வர். ஏனெனில், அறிஞர் அண்ணா அவர்களுக்கு இசைபாட அவ்வளவு இனிமையாக வராது என்பதைப் பலரும் நன்கு அறிவர். அப்படியிருந்தும் அண்ணா அவர்கள் மூன்று தடவைகள் துணிவோடு பாட்டுப் பாடிக் காண்பித்திருக் கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் 1943-ஆம் ஆண்டில் 'சந்தி ரோதயம்' நாடகம் எழுதி, முதல் முயற்சியாக அவரே நடித்துப் பார்ப்பதற்கு, வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவத்திபுரம் என்ற பேரூரைத் தேர்ந்தெடுத் தார்கள். அங்கு முயற்சி வெற்றிகரமாக முடியவே பிறகு பிற ஊர்களிலும் அவர்கள் நடிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக நடித்து நடிப்புக்கலையில் தேர்ந்த மிகச்சிறந்த நடிகரைப்போல் நடிக்கும் ஆற்றல், அறிஞர் அண்ணா அவர் களிடம் உண்டு என்பதைப் பலரும் அறிவர். அண்ணா அவர்கள் நடிப்பில் தேறினார்கள், ஆனால் பாட்டுப் பாடு வதில் தேறவில்லை. அண்ணா அயர்கள் 'சந்திரோதயம்' நாடகத்தில் பல ரோடு சேர்ந்தும், தனியாகவும் மூன்று ஊர்களில் பாடிப் பார்த்தார்கள். அவர்களே உணர்ந்தார்களோ அல்லது
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/96
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
