இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 அவரது இசை இனிமை'யைக் கேட்டவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டார்களோ, தெரியவில்லை, பாடுவதைப் பிறகு நிறுத்திவிட்டார்கள். அண்ணா அவர்கள் பாட்டுப் பாடும் அரிய காட்சியைக் கண்ட ஊர்கள் திருவத்திபுரம், சென்னை, திருச்சி ஆகிய மூன்று ஊர்கள்தாம். கன்றம், நாள்: 15.9.55 உள்ளம் உருக்குவது கவிதை சிந்தித்தால் உரையாற்றலாம். சிந்தித்து நெகிழ்ந்தால் மட்டும் தான் கவிதையாற்ற முடியும் தாம் கண்டு உள்ளம் நெகிழ்ந்தவற்றை மற்றவர் கள் கண்டு நெகிழும் வண்ணம் அள்ளித் தருவது தான் கவிதை. அறிஞர் அண்ணா ஓட்டை வேண்டாம் . மட்டும் நீங்கள் கடினமாக உழைத்தால் போதாது. துணிவுடன் நீங்கள் செயலாற்றி னால் மட்டும் போதாது. பல நூற்றாண்டு கால மாக உங்கள் உள்ளங்களிலே புகுந்து கொண்டுள்ள "ஒட்டைகளை அகற்ற முன் வரவேண்டும். பகுத் தறிவு தங்கு தடையின்றி அங்கு ஆட்சி செலுத்த வேண்டும்." அறிஞர் அண்ணா