ஐயப்பாட்டிற்கு ஆளான நிலைமை 1916-ஆம் ஆண்டிலோ அல்லது 1947-ஆம் ஆண்டி லோ ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் பொதுக் கூட்டம் ஒன்றின் கலந்துகொள்ளத் திருச்சிக்குப் போக வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. புகைவண்டியில் ரற எழும்பூர் புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார்கள். அன்றே திருச்சிக்குப் கூட்டியே முதல் வகுப்பில் தங்களுக்கு இடங்கள் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த அண்ணாவின் நெருங்கிய நண்பர் கள் சிலர், எதிர்பாராத விதமாகத் தங்கள் பயணத்தை நிறுத்திக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களைக் கண்டதும் முதல் வகுப்பு டிக்கட்டுகளை அண்ணாவிடம், கொடுத்துவிட்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாகச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள். புறப்படத் திட்டமிட்டு, முன் அண்ணா அவர்கள் பயணத் துணையாக அழைத்துச் சென்றிருந்த காஞ்சித் தோழர் சி.வி. இராசகோபால் அவர் களோடு, வேறு யாரையேனும் நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று கருதி புகைவண்டி நிலையத்தில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தபொழுது. அண்மையில் காலஞ்சென்ற தோழா எம்.எசு. முகைதீன அவர்கள் திருச்சிக்குப் போக வந்தார். அண்ணா அவர்கள் அவரையும் முதல் வகுப்புக்கு அழைத்துக் கொண்டார்கள்.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
