பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தோழர் முகைதீன் அவர்கள் பழைய இரும்பு வியாபாரியாக இருந்ததால், துருப்பிடித்த ஒரு தகரப் பெட்டியைக் கையில் வைத்திருந்தார். அத்துடன் அவர் முதல் வகுப்பு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். படாடோபமற்ற தோற்றத்தில் அறிஞர் அண்ணா அலங்கோலமான தோற்றத்தில் தோழர் சி.வி.இராச கோபால், (அவர்து தோற்றத்தைப் பற்றித்தான் எல்லோர்க்கும் தெரியுமே) அழுக்கடைந்த உடையோடு, தகரப் பெட்டியுடன் தோழர் முகைதீன் ஆகிய மூவரும் முதல் வகுப்பு வண்டியில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்த டிக்கட்டுப் பார்வையிடுவோர் அனைவர்க்கும் தனித்தனி யாக ஐயப்பாடு ஏற்பட்டது. ஐயப்பட்ட ஒவ்வொருவரும் அறிஞர் அண்ணா அவர்கள் உட்கார்ந்திருந்த வண்டியில் ஏறி டிக்கட்டு கேட்கவும், அண்ணா டிக்கட்டுகளைக் காட் டவும், அவர்கள் பார்த்துவிட்டு இறங்கிப்போகவும் ஆன நிகழ்ச்சிகள் வண்டி புறப்படும் வரையில் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தனவாம். புகைவண்டி செங்கற்பட்டுச் சந்திப்பில் போய் நின்ற போது, தோழர் முகைதீன் அவர்கள் தாம் முதல் வகுப்பில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டு, வழக்கம்போல், புகைவண்டி நிலையத்தில் ஒரு அணாத் தேநீர் விற்பவனை விளித்துத் தேநீர் கேட்டாராம். முதல் வகுப்பில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் ஒரு அணாத் தேநீரை விளித்துக் கூப்பிடுகிறாரே, இவர் டிக்கட்டு வாங்கி யிருப்பாரோ!" என்று ஐயப்பட்டுக்கொண்டு ஒரு பார்வை விடுவோர் வண்டியில் ஏறி, ஒருவரிடமும் டிக்கட்டு இருக் காது என்ற எண்ணத்துடன மூவரையும் பார்த்து டிக்கட்டு கேட்டாராம். அவர் பார்வையிட்டு விட்டுப் பேசாமல் இறங்கிவிட்டாராம். , என்ற டிக்கட்டு வாங்கவில்லையோ என்ற ஐயப்பாட்டிற்கு அளாக வேண்டிய நிலைமை அறிஞர் அண்ணா அவர் களுக்குத் திருச்சி போயச் சேரும் வரையில் ஏற்பட்டதாம். மன்றம், நாள்: 1.10.55.