பக்கம்:அதிசயப் பெண்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அதிசயப் பெண்


சோம்பேறியாகப் பொழுதைப் போக்காமல் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற திருப்தியுமே அவருக்கு ஊதிய மாயின.

தினந்தோறும் காலையில் எட்டு மணிக்கு அவர் நல்ல உடைகளை அணிந்துகொண்டு போய்விடுவார். உணவு கொள்ள வேண்டிய வேளைகளில் வீட்டுக்குப் போய் வருவார். இல்லையானல் அந்த இடத்திற்கே உணவை வருவித்துக் கொள்வார். இரவு எட்டு, ஒன்பது மணி வரையில் தம் உத்தியோகத்தைப் பார்ப்பார். பிறகு காரியாலயத்தைப் பூட்டிக்கொண்டு போய் விடுவார். சில நாட்கள் உற்சாக மிகுதியினால் இரவு நேரங்களிலும் அங்கே தங்கிவிடுவது உண்டு.

அது என்ன உத்தியோகம்! சரியானபடி வேலை வாங்கும் உத்தியோகந்தான். சோம்பலில்லாமல் ஒவ்வொரு நிமிஷமும் ஜாக்கிரதையாகக் கவனித்துச் செய்ய வேண்டிய காரியம். வீதி வழியாக யார் யார் போகிறார்கள், அவர்கள் உருவம், உடை, காதில் விழுந்த பேச்சு, போகும் நேரம்-இவைகளை எல்லாம் குறித்து வரும் வேலையை அவர் யாருடைய ஏவலுமின்றி, ஊதியத்தை எதிர்பாராமல் செய்துவந்தார். சாலையில் எந்த நிமிஷத்தில் யார் வருவாரென்று கண்டார்கள்? இளைய அழகிய மங்கை ஒருத்தி போவாள்; அடுத்த கணத்தில் கிழட்டு எருமை ஒன்று அந்த வழியே ஒடும். கோபத்தோடு இருவர் பேசிக்கொண்டே போவார்கள்; தொடர்ந்து கொம்மாளம் போட்டுக்கொண்டு சில சிறுவர்கள் நடப் பார்கள். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளும் கைங்கரியத்தை அந்த மகாராஷ்டிர கன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/24&oldid=1064861" இலிருந்து மீள்விக்கப்பட்டது