பக்கம்:அதிசயப் பெண்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அதிசயப் பெண்


பழக்கமுடைய அவனைச் சந்தேகித்துச் சோதனை போட்டார்கள், பண்டம் அகப்படவில்லை.

யாரோ ஒருவர், “இந்தத் துப்புத் துலங்க வேண்டு மானால் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இதோ இந்தச் சாலையில் ஒரு மகாராஷ்டிரர் இருக்கிறார். அவர் ஒரு பைத்தியக்கார உத்தியோகம் பார்த்து வருகிறார். அவரிடமுள்ள குறிப்புகளைப் பார்த்தால் நமக்கு ஏதாவது உளவு கிடைக்கலாம்” என்று சொன்னார். அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி அந்த மகாராஷ்டிர கனவானுடைய உத்தி

யோகசாலைக்கு வந்தார்கள். -

அவர்களை அந்தக் கனவான் வரவேற்றார், பிறகு அவர்கள் விரும்பியபடி தம்முடைய தினக் குறிப்புக்களைக் காட்டினார். ‘ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வேலையற்றுப் போய் இந்த மனிதன் இப்படி எழுதிக் குவித்திருக் கிறானே!’ என்று அவர்கள் எண்ணி நகைத்தனர். பிறகு தங்கப் பாத்திரம் களவு போன நாளில் எழுதியவற்றைப் பார்த்தார்கள். அன்று காலேயிலிருந்து இரவு வரையில் அந்தச் சாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இருந்தன; பின் வரும் குறிப்பு அவர்கள் கண்களில் பட்டது:

“மாலை ஆறரை மணி. ஒரு குட்டையான மனிதன் தன் மேல் வேஷ்டியில் எதையோ ம்றைத்தபடியே வந்தான் அரண்மனை யிலிருந்து வந்திருக்கலாம். எதிரே உள்ள் சாக்கடைக்கு அருகில் உட்கார்ந்தான். உடனே டபீர் என்ற சத்தம் கேட்டது; அடுத்த நிமிஷம் அவன்

எழுந்து போய்விட்டான்.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/26&oldid=1104940" இலிருந்து மீள்விக்கப்பட்டது