32
அதிசயப் பெண்
எல்லாப் பழத்தையும்விடக் கரும்பின் பழம் அதிகமாகத் தித்திப்பாக இருந்ததாம். கரும்புப் பழத்தைத் தின்றவர்களுக்கு வேறு எந்தப் பழமும் பிடிக்காது. அதோடு கரும்பையும் தின்று மனிதர்கள் இன்பம் அடைந்தார்கள். கரும்பை வெட்டித் தின்னும்போது நடுநடுவில் கணு இருக்கிறதே, அதை வெட்டி எறிந்துவிடுவார்கள். அப்போதெல்லாம் கணு இன்னும் பெரிதாக இருக்கும். அந்தக் கணுவைக் கண்டால் மக்களுக்குப் பிடிப்பதில்லை. சோம்பேறிகள் அதற்காகப் பயந்துகொண்டு கரும்பையே தின்பதில்லை. கரும்புப் பழத்தை மாத்திரம் தின்றார்கள். சோம்பேறிகள் உலகத்தில் அதிகமாகிப் போகவே கரும்பின் பழத்தை மாத்திரம் தின்றுவிட்டுக் கணு இருப்பதனால் கருப்பங் கழியை எறிந்துவிட்டார்கள்.
வரவர ஜனங்கள் தன் பழத்தை மாத்திரம் சாப்பிடுவதையும் கழியை மதிக்காமல் போட்டுவிடுவதையும் பார்த்த கரும்புக்கு மனசில் மிகவும் வருத்தம் உண்டாயிற்று. பழையபடி எல்லோரும் கழியையும் விரும்பும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தது. அதற்கு ஒரு வழியும் தோன்றவில்லை. கடைசியில் அது தன்னைப் படைத்த கடவுளிடம் போயிற்று.
“கரும்பே, கரும்பே! எங்கே வந்தாய்?” என்று கடவுள் கேட்டார்.
“உங்களிடம் ஒரு வரம் கேட்க வந்தேன்!” என்று கரும்பு சொல்லியது. அப்படிச் சொல்லும்போதே அதற்குக் கண்ணில் நீர் ததும்பியது.
“ஏன் வருத்தப்படுகிறாய்? உனக்கு என்ன வருத்தம் வந்தது? உன்னுடைய வம்சம் வளர்ந்துகொண்-