பக்கம்:அதிசயப் பெண்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இணைந்த அழகு

திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர் புதுக்கோட்டைச் சம்ஸ்தானத்தில் இருந்தார். நல்ல சம்ஸ்கிருத வித்துவான். சங்கீதம் தெரிந்தவர்; தமிழ் வக்கீல். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவர். புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர்.

அவர் ஒரு நாள் மகாராஜாவைப் பார்த்து உரையாடிக் கொண்டிருக்கையில் மகாராஜாவிடம் எதையோ கொடுப்பதற்கு ஒருவன் வந்தான். மிகவும் குருபியான அவனைப் பார்த்தபோது சாஸ்திரிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் குரலில் கேட்கச் சகிக்காத கரகரப்பு ஒன்று இருந்தது. அவனுடைய உருவத்தைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/44&oldid=1482994" இலிருந்து மீள்விக்கப்பட்டது