பக்கம்:அதிசயப் பெண்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

அதிசயப் பெண்



வெளி வரப்போகிறது என்ற குதூகலம் அவருக்கு உண்டாயிற்று.

“டேய், உன்னைப்பற்றிச் சாஸ்திரிகள் ஒரு சுலோகம் சொல்லப் போகிறார்!” என்று சமையற்காரனைப் பார்த்துச் சொல்லி, சாஸ்திரிகள் வாயிலிருந்து சுலோகம் வெளி வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சமையற்காரனுக்கும் உற்சாகம் உண்டாயிற்று. தன்னைப்பற்றி மகாராஜாவும் அந்த வித்துவானும் பேசிக் கொள்வதென்றால் அதுவே பெரிய காரியம் அல்லவா?

சாஸ்திரிகள் சிறிது நேரத்தில் மிகவும் அருமையான சுலோகம் ஒன்றை இயற்றிச் சொல்லி அர்த்த விசேஷத்தையும் எடுத்துரைத்தார்.

***

ர் அழகான வேப்ப மரம்: தழைத்து அடர்ந்து பூவும் காயும் கனியும் பொதுளி யிருந்தது. அந்த வேப்ப மரத்தை நச்சி இரண்டு பிராணிகள் அடைந்தன. வேப்ப மரத்தின் இலையை மிகவும் ஊக்கத்தோடு உண்பதில் பிரியமுள்ள ஒட்டகம் ஒன்று வேப்ப மரத்தடியில் வந்து நின்றது. வேப்பம் பழத்தை அமிர்தம்போல் எண்ணி உண்ணும் காகம் ஒன்று தனக்கு இயற்கையாகவே ஒரு பெரு விருந்து அந்த மரத்தில் இருந்தது கண்டு பரமானந்தத்தோடு அந்த மரத்துக் கிளையில் வந்து அமர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/46&oldid=1482996" இலிருந்து மீள்விக்கப்பட்டது