பக்கம்:அத்தை மகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


புதுமையில் மோகனமாய்த் திகழ்ந்த ரத்னத்தின் பழச்சுளை உதடுகள் அடிக்கடி ஹூஹூங்....ஹிஹூங்.....ஹி..ஹூங்' என்று மணிச் சிரிப்பைத்தான் சிந்தின.

ஆமாம், அவள் ரொம்பவும் மாறிப் போனாள். அத்தான் சுந்தரம் நினைத்தது மெத்தச் சரிதான் !

இல்லையெனில் அவள் மறைந்து நிற்பாளா? அவனை அவள் மறந்துவிடவில்லை. எப்படி மறக்க முடியும்? வேலையற்ற வேளைகளில் எல்லாம்---அந்த நேரம் அவளுக்கு மிக மிக அதிகமாகவே இருந்தது----அத்தானைப் பற்றி, சுந்தரம் சின்னப்பயலாகத் திரிந்தபோது நடத்திய 'லூட்டி'களைப் பற்றி, தன்னை அவன் அழ ஆழக் கேலி செய்ததைப்பற்றி யெல்லாம் எண்ணி எண்ணிக் களிப்பாள். உள்ளத்து முற்றத்திலே நினைவுக் கோலங்களிட்டு, அழித்து அழித்துப் புதிதாகத் தீட்டித் தீட்டி மகிழ்ந்து போவது அவளுக்கு இனிக்கும் பொழுது போக்கு. இளம் பிராய நினைவுகள் வர்ணம் காயாத புத்தம் புதிய ஓவியங்கள் போல் பளிச்சிடும் அவள் மனதிலே.

'அழ வைத்தால்தான் என்ன ? அவன் செய்த குறும்புத்தனங்கள் எனக்கு சங்தோஷம் தரப் போய்த் தானே அவன் கூட சண்டை போட்டுக்கொண்டே விளையாடித் திரிந்தேன். அவன் ஊருக்குப் போனதும் எனக்கு என்னவோ மாதிரிப் போய்விட்டது. பொழுது போகவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கேயும் இங்கேயும் திரிந்து, கடைசியில் அலுத்துப்போய் படுத்துத் துரங்கியிருக்கிறேன் எத்தனையோ நாட்கள். அவனுக்குக் குறும்புத்தனம் ஜாஸ்தி. அதனாலென்ன ? ரொம்ப நல்ல அத்தான்.... ....”

இவ்விதம் நினைக்கும் போதெல்லாம் ரத்தினத்தின் முகம் சிவந்து விடும். அதற்குக் காரணம் உண்டு. ஒரு சமயம் சுந்தரம் தனியாக உட்கார்ந்திருந்தான். ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/15&oldid=975923" இலிருந்து மீள்விக்கப்பட்டது