பக்கம்:அத்தை மகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

படித்துக் கொண்டிருந்தான். ரத்தினம் வந்தாள். அவனைக் கவனித்தாள். என்ன நினைப்பு வெடித்ததோ! அவன் பக்கத்தில் போய் நின்றாள். அவனது முகத்தை, எடுப்பான மூக்கை, கறுக மணிக் கண்களை, சிரிப்பு பிறக்கலாமா வேண்டாமா என்ற துடிப்போடு காணப்பட்ட உதடுகளைப் பார்த்தாள். அவன் மௌனமாக அவளைப் பார்த்தான். ஏனோ கேலி செய்யவில்லை. என்ன வேணும் என்று கேட்கவில்லை. 'இவர் ஒரு அத்தான், இவர் நல்லவர், ரொம்பவும் நல்ல அத்தான்' என்றாள். பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் 'கண்ணன் தின்னும் பண்டம் என்ன? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய்' என்று நீட்டி இழுத்துப் பாடம் படிப்பதுபோல் சொன்னாள் அவள். சொல்லும்போதே அவனது மூக்கைத் தன் சின்னஞ் சிறு விரல்களால்---தங்கரளிப் பூ மொட்டுகள் போன்ற விரல்களினால்---அன்பாகப் பற்றினாள் அவன் விளையாட்டாகச் சிரித்தான். அன்று ஏனோ 'அவனுக்கு அவளது கன்னத்தில் ஓங்கியறைந்து பன் ரொட்டியாக்கி விடவேனும் என்ற எண்ணம் வரவில்லை. அவளது மென் கன்னத்தை 'பன்' போல் வீங்க வைக்கிற கலை கைவந்தவன் தான். ஆனால் அன்று கை வண்ணம் காட்டும் எழுச்சி அவனுக்குப் பிறக்கவில்லை ! 'இவர் ஒரு அத்தான். இவர் ரொம்ப நல்லவர்' என்று மீண்டும் பாடம் படித்த சிறுமி அவன் மீது சாய்ந்து 'பளிச்' என்று முத்தமிட்டாள்' அவன் கன்னத்திலே. அவன் அதை எதிர் பார்க்கவில்லை. திடுக்கிட்டவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் சிரித்தபடி ஓடிப்போய் விட்டாள்.

அப்பொழுது அவள் ' அறியாச் சிறுமி ' என்று சொல்ல முடியாது. இந்தக் காலத்துப் பெண்கள் இரண்டு மூன்று கூடிவிட்டால் என்ன எழவைப் பற்றிப் பேசிச் சிரித்து விளையாடி மகிழ்ந்து போகின்றன, தெரியாதா! சுந்தரம் அதை நன்கறிவான். 'மூதி! கண்ட புள்ளேகளோ டெல்லாம் சேர்ந்து........ அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/16&oldid=975930" இலிருந்து மீள்விக்கப்பட்டது