பக்கம்:அத்தை மகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



அவனுக்கு அவள் தீர்மானத்தை அறிவித்தபோது வழக்கமான 'இப்ப என்ன அவசரம்?' என்கிற பதிலை அனுப்பி வைத்தான். செல்லுபடியாகவில்லை. 'அடுத்த வருஷம் அவசியம் கல்யாணம் செய்து கொள்கிறேன். இப்பொழுது பொருளாதார நிலை சரியாக இல்லை' என்ற காரணம் கூறி அவன் வழ வழ யென நாலைந்து பக்கம் எழுதினான். அவனுடைய பொருளாதார மாந்தத்துக்கு ஒரு விளக்கெண்ணெய் சிகிச்சையை பலமாகச் சிபாரிசு செய்தாள் அத்தை. -

உன் இஷ்டம்போல் கல்யாணத்தை அடுத்த வருஷமே வைத்துக் கொள்ளலாம். ரத்னத்தின் ஜாதகத்தைப் பார்த்ததில் இப்பொழுது நிச்சயதார்த்தமாவது செய்து விடவேணுமென்று சொல்லுது ஊர்க்காரர்களும் சொல்லுகிறார்கள். நாளைக்கு நாலு பேரு நாலைச் சொல்லும்படி ஆகிவிடப்படாது. அதனாலே அவசியம் உடனே புறப்பட்டு வரவேண்டியது. மற்றவை நேரில்'-இந்த விஷயத்தை தனக்கே உரிய 'வழவழா கொழ கொழா’ப் பாணியில் மூன்றரைப் பக்கக் கடிதமாக எழுதச் செய்து அனுப்பி விட்டாள்,

'அத்தை சொல்வதும் சரிதான். இந்த வருஷம் நிச்சயம் செய்து விட்டு, பிறகு கல்யாணத்தை முடித்துக் கொள்ளலாம். ஊருக்குப்போயிட்டு வந்ததும் நாளாச்சுல்லா. 'போவமே' என்று புறப்பட்டு விட்டான்.

வழியெல்லாம் அத்தை மகள் ரத்தினத்தைத் தவிர வேறு யாரைப்பற்றி, அல்லது எதைப்பற்றி, அவனால் எண்ண முடியும்?

இங்கு வந்தால் அவள் 'கண்ணாமூச்சி' விளையாடுகிறாள் பாருமேன் என்று அலுத்துக் கொண்டது மனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/19&oldid=978140" இலிருந்து மீள்விக்கப்பட்டது