பக்கம்:அத்தை மகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



ரத்னம் அழுகை பாவம் பிடித்து சினுங்கிக்கொண்டே சொன்னாள்; 'ஏட்டி ஏட்டின்னு சொல்லுதானம்மா அவன்'.

'சொன்னால் என்ன கெட்டுப்போச்சு?' என்றாள் தாய்.

அவன் அமர்க்களமாகச் சிரித்தான். ஒஹ்ஹொ ஹொஹோ...ஒஹ்ஹொஹோ......”

ரத்னத்துக்குப் பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமா, இவொ வந்துட்டோ. அவொ மருமகப்புள்ளே யல்லவா! மருமொவோப் புள்ளே! அதினாலே பரிஞ்சுக்கிட்டு வந்துட்டோ. வவ்வவ் !'

தாய்க்கு வேடிக்கையாகத் தானிருந்தது. அவள் சிரித்தாள். மகளுக்கோ வேதனை. 'இளியுங்க அம்மா நல்ல இளியுங்க. பல்லு முப்பத்திரெண்டையும் பளிச்னு காட்டிக்கிட்டு இளியுங்க. இஹறிஹின்னு. ஏட்டியாம். அப்ப நானும் சொல்லுவேன்.....-ஏலே. ஏலே ஏலே ஏலேய் ...ஏலெ சுந்தரம்..ஏலெ ஏ அய்யா ஏ. ராசா சுந்தரோம்.:

'எட்டி அத்தானை அப்படிச் சொல்லலாமா?' என்று குறுக்கிட்டாள் தாய்.

'பத்தியா! அவ மருமகனுக்குத்தான் ஏண்டுக் கிட்டு வருவா, அத்தானாம், அவன் மட்டும் சொல்லலாம் போலிருக்கு பின்னே !'

'அவன் என்ன சொன்னான் ?’.

'சொன்னுன் சோத்துக்கு உப்பு இல்லேயின்னு: ஒண்னும் தெரியாதது மாதிரித்தான். ஏட்டியின்னான். புள்ளெயின்னான். ரத்னம், ரத்னாபாய் அப்டின்னுயெல்லாம் சொல்லலியோ?”

தகரக்கொட்டகையில் மழை பெய்ததுபோல் சட சட படபட வென்று பொரிந்து தள்ளினாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/7&oldid=975915" இலிருந்து மீள்விக்கப்பட்டது