பக்கம்:அத்தை மகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



அம்மா! அம்மா! காது செவிடாப் போகும் போலிருக்கு நீ கத்துற கத்து, மெதுவாகப் பேசேன்' என்று சொல்லி, காதுகளைத் தன் இரு கைகளாலும் மூடிக் கொண்டு. சிரித்தாள் தாய்.

'சொன்னா என்னன்னு கேளு, அத்தெ! அவ பேரு ரத்னமா இல்லையா?' என்று 'ஊடுபாவு’ ஒட்டினான் சுந்தரம்.

'நீ பேசாம இரேன். உன்னையாரு கூப்பிட்டா இப்போ' என்று வாயடி அடித்தாள் சிறுமி.

நீயும் பேசாமல் இருக்க வேண்டியது தானே? என்று கனைத்தான் பையன். -

'வவ் வவ்.....'

'லொள் லொள் லொள்! புல் டாக்... ஏ குட்டி நாய்....உன் பேரு ரத்னமில்லாமே கொழுக்கட்டையா? பையனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கனைத்தான்.

அவள் உறுமினாள். 'நீ தாண்டா கொழுக்கட்டை. ஊசக்கொழுக்கட்டை சுந்தரம்-மந்தரம்-மாயக் கொழுக் கட்டை...மறுநாத்துப் பார்த்தா ஊசக்கொழுக்கட்டை!.... டோடோ. ஊசக்கொழுக்கட்டை ...டோடோ... டோடோ...'

அவன் சும்மா யிருப்பானா ?

'அத்தை மக ரத்தினம்
பத்து இட்லி தின்பாளாம்!
பத்து இன்னும் கிடைச்சாலும்
அத்தனையும் தின்பாளாம் !
எத்தனை இட்லி இருந்தாலும்
அத்தனையும் மொக்குவா
அத்தை மக ரத்தினம்!'


ரத்னத்திற்கு அழுகை வந்துவிட்டது. 'அம்மா, பாரம்மா' என்றாள் இழையும் குரலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/8&oldid=975916" இலிருந்து மீள்விக்கப்பட்டது