பக்கம்:அனிச்ச மலர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99


தண்ணிரில் நனைந்த புடவையும் வெயில் வெளிச் சத்தில் தங்கப்பாளமாக மின்னும் அழகிய சதைச் செழிப் புள்ள முதுகுமாகச் சுமதி தண்ணிர் கரையருகே குப்புறச் சாய்ந்தாற் போலப் படுத்துக் கொண்டாள். காமிரா ஆட்கள் எல்லாம் ரெடியாயிருந்தனர்.

"இந்த ஒரு ஸீனாலேயே படம் பணத்தைக் குவிக் கணும். முதுகு மட்டுமில்லே; அதுக்குக் கீழேயும் கொஞ் சம் புரொஜெக்ட்'டிவ்வா எடுங்க” என்ற தயாரிப்பாளர் காமிராமேனிடம் சொல்லிக் கொண்டிருந்தது சுமதிக்குக் கேட்காமல் போகவில்லை. நன்றாகக் காதில் விழுந்தது.

'டுப் போட்டதே நல்லதாப் போச்சு. குந்தளகுமாரி யோட முதுகு இப்படிப் பசு வெண்ணெய் மாதிரித் தளதளன்னு இருக்காது. மூங்கில் மொறம் கணக்கா இருக்கும். நெல்லுக்கூடக் காயப் போடலாம். அத்தனை பெரிசு. இவ சும்மா லட்டு மாதிரி இருக்கா.” இதுவும் தயாரிப்பாளர்தான். அடிக்கடி சுமதியை 'லட்டு என்றார் அவர். -

மறுபடியும் யாரோ குறுக்கிட்டார்கள். "சார்! தண் ணரீரிலே ஹீரோயின் குதிச்சுக் கரையிலே ஒதுங்கறத்துக் குள்ளே இப்படிச் சேலை கீலை எல்லாம் ஒதுங்கி ரவிக் கை காணாமப் போயி வெறும் முதுகு மட்டும் 'ப்ரா' பட்டையோட தெரியறாப்பில ஆயிடுச்சிங்கறத நம்பவே முடியாது சார். கொஞ்சம் யோசனைப் பண்ணிச் செய்யுங்க”

“அட, இவன் யார்ராவன்? படம் பார்க்க வர்ரவன் கண்ணுக்குக் குளுமையா ரெண்டு காட்சியைச் சேர்க் கலாம்னா என்னென்னமோ தர்க்கமெல்லாம் பண்ணிக் கிட்டிருக்கான். நீ சும்மா இரு அய்யா, டைரக்டர் சார்! நீங்க ஷாட்டை ஓ.கே. பண்ணுங்க” என்றார் தயாரிப்பாளர்.

"இல்லீங்க! இது ஒரு சோகமான கட்டம். இதுலே போயி செக்ஸ்'ஸை நுழைச்சோம்னாக் கதையிலே சுருதி பேதம் தட்டும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/101&oldid=1146916" இலிருந்து மீள்விக்கப்பட்டது