பக்கம்:அனிச்ச மலர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அனிச்ச மலர்

கெட்டுப் போவதற்குத் துரண்டுகிறாளா என்பது புரியாமல் சுமதி மருண்டாள்.

தயாரிப்பாளர் கன்னையாவைப் பொறுத்தவரை சுமதியிடம் மிகமிகத் தாராளமாக நடந்து கொண்டார். ஒருநாள் அவள் ஏதோ ஜவுளிக் கடைக்குப் போக வேண் டும் என்றாள். அந்த ஜவுளிக் கடை கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. பாண்டி பஜாருக்கு அவள் இருந்த அபிபுல்லா ரோடிலிருந்து நடந்தே கூடப் போய்விட்டு வந்துவிடலாம். கன்னையாவிடம் போய்க் கடைக்குப் போகப் போவதைச் சொன்னதும், 'என்னம்மா நீ இன்னும் விவரந் தெரியாத பொண்ணாயிருக்கே, உன்னை மாதிரிப் பத்துப் பத்திரிகையிலே படம் எல்லாம் வெளி வந்து பிரபலமான ஸ்டார் ஒருத்தி அனாதை மாதிரித் தெருவிலே நடந்து போறது நல்லாவா இருக்கும்? நீ அப்பிடி எல்லாம் போகப்பிடாது, அது உனக்கும் மரியாதை இல்லே. உன்னை வச்சுப் படம் எடுக்கிற எனக்கும் மரியாதை இல்லே. இங்கே இருக்கிறதுக்குள்ளே பெரிய சவர்லெட் வண்டியிலே உன்னைக் கடையிலே கொண்டு போய் விட்டுக் கூட்டிக்கிட்டு வர்ரேன்” என்றார். "நீங்க எதுக்குங்க வீணா அலையனும்? நானே போயிட்டு வந்துடறேன்” என்றாள் அவள். “சரி வேண் டாம்னா நான் வரலே. டிரைவரைக் கூப்பிட்டுச் சொல்லிட றேன். நீ போயிட்டு வா. வேணுங்கறதை வாங்கிக்கோ. பணம் ஏதாச்சும் வேணுமா? இந்தா! எதுக்கும் கையோட வச்சுக்கோ இருக்கட்டும்” என்று ஒர் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவளிடம் எடுத்துக் கொடுத்தார் கன்னையா

"பணம் வேண்டாங்க ஏற்கெனவே நீங்க கொடுத்த 'செக்கை மாத்திக் கொஞ்சம் பணம் எடுத்து வச்சிருக்கேன். அது போறும்னு நினைக்கிறேன்" என்று மறுத்தாள் சுமதி. கன்னையா விடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/146&oldid=1147360" இலிருந்து மீள்விக்கப்பட்டது