பக்கம்:அனிச்ச மலர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அனிச்ச மலர்

மீண்டும் மலரலாம் என்ற நம்பிக்கை உண்டு. வாடி விட்டால் பின்பு மலர்ச்சியைப் பற்றிக் கனவுகூடக் கான முடியாது. பெண் மென்மையானவளாக இருக்கலாம். அது தவறு இல்லை. ஆனால் பலவீனமானவளாக இருக்கக் கூடாது. மென்மையான உடலும், திண்மையான உள்ள மும் உள்ளவளாகப் பெண் இருக்கவேண்டும். பலவீன மான உடம்பும், பலவீனமான மனமும் கூடவே கூடாது. சபலமும் புகழ்வெறியும் ஆசைகளும் ஒரு பெண்ணைச் சீரழிக்கப் போதுமானவை.

இன்று நீ திருத்தி மீட்டுக் கொண்டுவர முடியாத நரகத்தில் வீழ்ந்துவிட்டாய். உன்னைப் பற்றி இனி மேல் நானோ பிறரோ நினைப்பதுகsடப் பாவம். வாடாமல் மொட்டாக இருந்தாலாவது இனி மலர்ச்சி வரும் என்ற எதிர்கால நம்பிக்கை உண்டு. வாடிவிட்ட மொட்டுக்கு அந்த நம்பிக்கையும் இருக்க முடியாது. வாடாதது மலரும், வாடியது கருகும், கருகுவது மறுபடி மலர முடியாது. இதுதான் உலக நியதி.

உன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைத்த போது நான் என்னென்னவோ சொப்பனங்கள் கண் டேன். நீ டாக்டராக, வக்கீலாக, புரொபஸராக, ஐ.ஏ.ஸ், அதிகாரியாக எப்படி எப்படி எல்லாமோ வருவாய் என்று எண்ணினேன். கடைசியில் நீ சாக்கடையில் போய்க் குதித்துவிட்டாய். உன் உடம்பெல்லாம் சேறாகி விட்டது. -

இனி உன்னை நினைப்பதைவிட மறப்பதுதான் நல் லது. கண்ட பத்திரிகைகளில் உன்னுடைய அரை நிர் வாணப் படங்களையும், முக்கால் நிர்வாணப் படங் களையும் பார்த்துப் பலர் என்னிடம் விசாரிக்கிறார்கள். என்னிடம் படிக்கிற பெண்களே அவற்றைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள். என்னோடு பணிபுரியும் சில மூத்த ஆசிரியைகள், "என்னடீ உன் பொண்ணை இப்படித் தாறுமாறாகப் போக விட்டுட்டே! நீ ஏன் கண்டிக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/160&oldid=1147390" இலிருந்து மீள்விக்கப்பட்டது