பக்கம்:அனிச்ச மலர்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

அனிச்ச மலர்

காக அவள் குடித்தாள். இன்று இப்போது இந்த விநாடியிலோ சுமதி தனக்காகவே குடிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் மிதமிஞ்சிப் போவதைப் பார்த்து மேரிக்கும், கன்னையாவுக்கும் பயமாயிருந்தது.

அம்மா, மகள் வாடிச் சருகாகிறாளே என்று வருந்தினாள். மகளோ கருகிச் சாம்பலாகிவிடவே முடிவு செய்துகொண்டு விட்டாற்போல் தீவிரமாகவும், வேகமாகவும், கெட்டுப் போகத் தொடங்கினாள். கன்னையா அவளைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்க வேண்டிய படம் என்ன ஆயிற்று என்பதை அவளும் மறந்துவிட்டாள். கன்னையாவும் மறந்துவிட்டார். சுமதி கன்னையாவுக்கும் மேரிக்கும் வேறு விதங்களில் பயன்படத் தொடங்கினாள்.

ஒரு சமயம் ஒரு பெரிய மில் முதலாளியின் மனைவி யிடம் சுமதிக்கு முற்றிலும் புதுமையான அனுபவம் ஏற்பட்டது. சுமதி ஒரு புத்தகத்தில் அதைப் படித்திருந்தாள் 'லெஸ்பியன் லெக்ஸ்' வகையைச் சேர்ந்த ஓர் அம்மாளை முதன் முதலாகத் தன்னருகே கண்டாள் அவள். எருமை மாடு மாதிரிப் பெருத்துக் கொழுத்திருந்த அந்த அம்மாள் ஒரு வேட்டை நாயின் வெறியோடு சுமதியைக் கசக்கிப் பிழிந்துவிட்டாள்.

"அந்த அம்மாளுக்கு ஆம்பிளைங்கன்னாலே பயம், ஆம்பிளைங்களே ஆகாது” என்றாள் மேரி. 'ஆம்பிளைங்க ஆபத்தான ஆளுங்க. விஷயத்தை வெளியிலே சொல்லிடுவாங்க'ன்னுமேரியிடம் ஒரு தடவை தன்னைப் பற்றி அந்த அம்மாளே சொல்லியிருந்தாள். மேரியும் சுமதியிடம் அந்த அம்மாளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருந்தாள்.

"இந்தம்மா பொம்பிளையாத் தேடறாரு இந்தம்மாளோட ஹஸ்பெண்ட் ஆம்பிளையாத் தேடறாரு. பிரிட்டன்லே ஒரே இனத்தைச் சேர்ந்தவங்க தனியிடத்திலே சந்திக்கிறது சட்டபூர்வமாயிட்டது. வேறே சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/162&oldid=1147396" இலிருந்து மீள்விக்கப்பட்டது