பக்கம்:அனிச்ச மலர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

161

ஊர்களிலே அப்படி ஒரே இனக் கலியாணத்தைக்கூட அங்கீகரிக்கிறாங்க இங்கே முடியாது; கூடாது.”

"சமூகத்திலே தனி மனிதர்களிடத்தில் பணம் அள வுக்கு அதிகமாகச் சேர்ந்தால் இப்படித் தாறு மாறுகள்தான் அதிகமாகும் என்பதை நம்ம நாட்டிலுள்ள பணத் திமிர் பிடித்த ஆணும் நிரூபிக்கிறான். பெண்ணும் நிரூபிக்கிறாள். பணம்தான் இதுக்கெல்லாம் காரணம்டீ, மேரி!' என்றாள் சுமதி.

"பணம் இல்லாட்டா எதுதான் நடக்கும் பணத் தேவை இல்லேன்னா நீயும் நானும் இப்படி எல்லாம் ஏன் ஆகப் போறோம்? எங்கப்பா ரெயில் என்ஜின் டிரை வர். எனக்குப் பத்து வயசானப்பவே செத்துப் போயிட் டாரு. அம்மாவும் நானும் மூணு தம்பிகளும் பிழைக்க வேண்டியிருந்தது. இப்படி ஆகவேண்டி வந்தது. உங்கப்பாவும் சின்ன வயசிலே போயிட்டார்னு நீ சொன்னே. உங்கம்மா தமிழ்ப் பண்டிட் நீயும் இப்போது இப்படி ஆயாச்சு. வறுமையுடன் தவிப்பவர்களைப் பணத்தோடு தவிப்பவர்கள் சந்திக்கு ' போதெல்லாம் தான் இப்படி ஸோவியல் கிரைம்ஸ் நிறைய நடக்குது.”

"ஆனால் இதெல்லாம் டு மச்! நம்ம நாட்டின் பெருமைக்கே இழுக்கு.” -

சுமதியின் விவாதங்களை மேரி ஏற்கவில்லை. "இப்படி எல்லாம் பேசினால் பணம் சம்பாதிக்க முடி யாது. கண்ணை மூடிட்டுத் தப்புப் பண்ணினால் தான் இங்கே பணம் சம்பாதிக்கலாம்” என்றாள் மேரி. 'நாம கண்ணைத் திறந்துண்டேதான் தப்புப் பண்றோமே?” என்று சுமதி இதற்குப் பதில் சொன்னாள். அவளுக்கு மேரியின் விரக்தியும் கசப்பு உணர்ச்சியும் புரிந்தன. அவர்கள் இருவரும் இதற்கு முன்பெல்லாம் தங்களுக்குள் எப்போதும் இப்படிப் பேசிக் கொண்டதே இல்லை. வரவர இருவருமே தங்களுக்குள் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாகி இருந்தது.

அ.ம.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/163&oldid=1147398" இலிருந்து மீள்விக்கப்பட்டது