பக்கம்:அனிச்ச மலர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அனிச்ச மலர்

கன்னையா தயாரிப்பாளரா அல்லது பெரும் பனக் காரர்களுக்கும் ஆஷாடபூதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருபவரா என்ற விஷயம் இப்போது சந்தேகத்துக்கு இட மில்லாமல் நிரூபணமாகிவிட்டது. வருஷம் ஒன்று விளை யாட்டுப் போல ஒடிவிட்டது. சுமதியின் பாங்க் கணக்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டுகிறாற் போலப் பணம் சேர்ந்துவிட்டது. தயங்கித் தயங்கி அவளிடம் ஒரு சமயம் கன்னையாவே அதைக் கடனாகக் கேட்டார்.

'பாங்கிலே தர்ற தைவிட இரண்டு மடங்கு 'இண்ட்ரெஸ்ட் தர்றத்துக்கு நான் தயார்” என்றார்.

"அதுக்கென்ன? தர்றேன். எங்கிட்ட இருந்தா என்ன? உங்ககிட்ட இருந்தா என்ன? உடனடியா இப்போ எனக்கு ஒண்ணும் செலவு இல்லே.”

"ஒரு புரோநோட் வேணும்னா எழுதிக்கலாம். புரோ நோட்டுலே உனக்கு நம்பிக்கை இல்லேன்னா டாகு மெண்ட் வேணா ரெஜிஸ்தர் பண்ணிக்கலாம். ஆனா ஒன்லி எ மேட்டர் ஆஃப் ட்வண்டி டேஸ்; இருபது நாளைக்கி ஒரு நோட்டான்னு கேக்காதே. பன விஷயம் பாரு” என்றார் கன்னையா.

'நான் செக் எழுதித் தரேன், எடுத்துக்குங்க. நோட்டும் வேண்டாம். வட்டியும் வேண்டாம். நீங்க முடியறப்போ திருப்பிக் கொடுங்க போதும்.”

"நான் உன் செக்கை எடுத்துக்கிட்டுப் பேங்குக்குப் போனா அது நல்லா இராது சுமதி! எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கு. நீயே தயவுசெய்து செல்ஃப் போட்டு எடுத்துக் குடுத்துடேன்” என்று கெஞ்சுகிறாற் போன்ற குரலில் குழைந்து நெளிந்து கேட்டார் கன்னையா.

"இதென்ன பெரிய விஷயம், தந்தால் போகுது! வாங்கிக்குங்களேன்” என்று சுமதி சம்மதித்து விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே பணம் எடுத்துக் கொடுக்கவும் செய்தாள். இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு பெரிய தொகை கேட்டார் கன்னையா. கடைசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/164&oldid=1147399" இலிருந்து மீள்விக்கப்பட்டது