பக்கம்:அனிச்ச மலர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

163



சுமதியின் கணக்கில் ஒரு பத்து ரூபாய் மட்டுமே மீதமிருக்கிற அளவு பணம் குறைந்துவிட்டது. மற்றதைக் கன்னையா படிப்படியாக வாங்கிக் கொண்டு விட்டிருந்தார்.

ஆனால் சுமதிக்கு அதனால் பணக் கஷ்டம் எதுவும் வந்து விடவில்லை. முன்புபோல் அவளை ராஜ போகத்தில் வைத்துக் கொண்டார் கன்னையா. நடுவே அவள் ஒருநாள் யோகாம்பாள் அத்தையின் வீட்டுப் பக்கமாகக் காரில் போக நேர்ந்தபோது அத்தையைப் பார்க்கலாம் என்று காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போனாள். வாசலில் அத்தையின் கணவர் எதிர்ப்பட்டவர் வழியை மறிப்பது போல் குறுக்கே எதிரில் நின்று கொண்டு "இங்கே எல்லாம் நீ இனிமே வராதே சுமதி: இது கெளரவமான ஃபேமிலி. உன்னாலே எங்க பேர் கெட்டுப் போகணும்கிறதுதான் உன் ஆசையா? தயவு செய்து போயிடு, இங்கே யாரையும் நீ பார்க்க வேணாம். உன்னைப் பார்க்கலேன்னு இங்கே யாரும் தவிச்சுக் கிடக்கலே’ என்று முகத்திலடித்தாற்போலச் சொல்லி விட்டார். சுமதிக்கு என்னவோ போல் அவமானமாக இருந்தது. வீடு திரும்பியதும் அவளே கன்னையாவைக் கேட்டு நிறையக் குடித்தாள். தன்னை மறக்க முயன்றாள். நடுநடுவே குமுறிக்குமுறி அழுதாள். கன்னையாவுக்கு அவள் நிலை புரியாத புதிராக இருந்தது.

23

ன்றைய நிகழ்ச்சிக்குப் பின் யோகாம்பாள் அத்தை வீட்டுக்கு இனிமேல் போகக்கூடாது என்று சுமதியின் உள்ளத்திற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. தன் தாய் தன்னை அதிகமாகத் திட்டியபோதெல்லாம், 'ரொம்பத்தான் திட்டாதீங்கோ. இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்' என்றெல்லாம் நிதானமாகப் பேசிய யோகாம்பாள் அத்தையின் கணவரா இப்போது தன்னை இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/165&oldid=1147400" இலிருந்து மீள்விக்கப்பட்டது