பக்கம்:அனிச்ச மலர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. பார்த்தசாரதி

33

”எனிதிங் எல்ஸ்...? நான் கிளாசுக்குப் போகணும் நேரமாச்சி..." என்று கிளம்பத் தயாராகி விட்டாள்.

"இந்தப் பணத்தை நான்..." என்று சுமதி ஏதோ ஆரம்பித்தாள். அவள் அதை முடிக்கவிடாமல்,

“ஒன்றும் அவசரமில்லை சுமதிǃ மெல்லப் பார்த்துக் கொள்ளலாம்” என்ற தானே வாக்கியத்தை வேறுவிதமாகச் சொல்லி முடித்துவிட்டாள் மேரி.

”இரு மேரிǃ நான்கூட ஸெகண்ட் அவர் கிளாஸுக்கு வரலாம்னு நினைக்கிறேன். ஃபேஸை வாஷ் பண்ணிண்டு வரேன்.”

"உன் ஃபேஸ்க்கு என்னடி சுமதி ! இப்படியே வந்தால்கூட ’கிளியோபாட்ரா’ மாதிரி இருப்பே”. மேரியின் கவனம் தன் உடல் அழகிலேயே இன்னும் இருப்பது சுமதிக்குப் புரிந்தது.

"மலேசியாவிலிருந்து படிக்க வந்திருக்கிறாளே உன் ஃபிரண்டு ஷீலா; அவளைவிடவா என்னை அழகுன்னு சொல்றே?” - -

-ஏதோ உள்ளர்த்தம் வைத்துக் கொண்டுதான் சுமதி இப்படிக் கேட்டாள்.

"ஷீலா மட்டுமென்ன? உன்னைவிட அழகானவள் இந்தக் காலேஜிலேயே வேறு யாரும் கிடையாது.டி... சுமதி" என்று அதே பாணியில் ஓர் உள்ளர்த்தம் பொதிந்த பதிலை மேரியும் அப்போது சுமதிக்குச் சொன்னாள். மேரியின் அங்கீகாரம் சுமதிக்குப் புரிந்தது. சுமதியின் இசைவு மேரிக்கும் ஒருவிதமாகப் புரிந்தது.

5

மேரியின் நிதானமும், பொறுமையும் சுமதிக்கு வியப்பூட்டின. நிபந்தனைகளோ நிர்ப்பந்தங்களோ இல்லாமலே அவள் தன்னிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனது நம்ப முடியாததாயிருந்தது.

அ.ம.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/35&oldid=1146872" இலிருந்து மீள்விக்கப்பட்டது