பக்கம்:அனிச்ச மலர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அனிச்ச மலர்

உடலிலிருந்து விலையுயர்ந்த வாசனைகள் கமகமவென்று கிளர்ந்து கொண்டிருந்தன.

"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே! மெல்ல ஆகட்டும்" என்றாள் சுமதி.

"அது சரியம்மா! அன்னிக்கு ஏன் கிளப்பிலே எங்களை எல்லாம் பார்த்ததும் ஏதோ பேயையோ, பிசாசையோ பார்த்துட்ட மாதிரிப் பயந்துக்கிட்டு ஒடினே?”

இதற்குச் சுமதி பதில் சொல்லவில்லை. நாணித்தலை குனிந்தபடியே சும்மா இருந்துவிட்டாள்.

"சரி! உன் மனசைச் சங்கடப்படுத்தறதா இருந்தா நான் அதைப்பத்திக் கேட்கலே. அதை மறந்துடலாம். இப்போ என்ன குடிக்கிறே? காபியா, போர்ன்விடாவா, இல்லே கூலா ஏதாவது?”

இதற்கும் அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவராகவே கையைத் தட்டி, 'டேய் யார்ரா புரொடக்க்ஷன் பாய்! ரெண்டு கோகோ கோலா வாங்கிட்டு வா, சொல்றேன். ஜல்தி போ... ஜில்னு இருக்கணும்" என்று ஆர்டர் போட்டார்.

சுமதி முதலில் பார்த்த அந்தக் காக்கி அரை டிராயர்ப் பையன் ஓடி வந்தான்.

"தோ வந்துட்டேன் சார்” என்று ஓடினான் அவன். சிறிது நேரத்தில் எக்ஸ்ட்ராக்கள் ஒரு வேனில் அடைத்துக் கொண்டு கிளம்பினார்கள். பெரிய நடிகர் நடிகைகள் காரில் கிளம்பினார்கள். நீ வாம்மா; போகலாம்” என்று சுமதியை மேக்-அப் அனெக்ஸுக்குள் அழைத்துச் சென்றார் தயாரிப்பாளர். அனெக்ஸ் அறை ஏ.சி. செய்யப்பட்டிருந்தது. உள்ளே மேக்-அப் மேனும், அவனுடைய உதவியாளனும் மட்டுமே இருந்தார்கள்.

தயாரிப்பாளர் கொஞ்சம் தாராளமாகவே உரிமை கொண்டாடி, "இதோ இந்தச் சேருக்கு வாம்மா! இது தான் ரொம்ப ராசியான சேர். இப்பப் பிரமாதமா ஜொலிக்கிறாளே குமுதகுமாரி, அவ முத முதலா இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/80&oldid=1122212" இலிருந்து மீள்விக்கப்பட்டது