பக்கம்:அனிச்ச மலர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அனிச்ச மலர்

அப்புறம் காமிராமேனும், தன் பங்குக்கு என்னென்ன விதமாகத் தொட முடியுமோ அத்தனை விதமாகவும் தொட்டாயிற்று.

"ஓ.கே. ரெடி.." என்று கூறியபடி ஒரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து உறிஞ்சிக் கொண்டே சிறிது ஒதுங்கி நின்றார், தயாரிப்பாளர்.

சுமதி சிரித்த முகமாக இருக்க முயன்றாள். விளக்குகள் பளிச்சிட்டன. அணைந்தன. மறுபடியும் பளிச்சிட்டன. நடுவே, "இந்தாம்மா! ரொம்பக் களைப்பா இருக்கும்! குடி’ என்று மற்றொரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார் தயாரிப்பாளர்.

"இப்ப வேண்டாம்! முடிஞ்சதும் எடுத்துக்கறேன்' என்று கூறியபடி அவர் நீட்டிய பாட்டிலை எடுத்து மறுபடி டிரேயிலேயே வைத்தாள் சுமதி. முகபாவங்களை மாற்றச் சொல்லி இரண்டு மூன்று முறை படங்களைப் பிடித்தபின் "உனக்கு நல்ல காமிரா ஃபேஸ் இருக்கும்மா” என்றார் தயாரிப்பாளர். காமிராமேன் ஒன்றுமே சொல்லவில்லை. அவளும், தயாரிப்பாளரும் ஃப்ளோருக்குள்ளிருந்து வெளியேறு முன்பாகத் திடீரென்று மேரியும் அங்கே வந்து சேர்ந்தாள். "ஹாய் சுமதி: பிரமாதம்” என்றாள் மேரி. சுமதியும் அவளை நோக்கி, "தாங்க்ஸ் மேரி: உன் காம்ப்ளிமெண்ட்ஸைவிட வேறென்ன பெரிசு ?” என்று சிறிது தாராளமாகவே அப்போது அவளைப் பாராட்டி வைத்தாள்.

11

மேரியைக் கண்டதுமே அந்தத் தயாரிப்பாளர் படு உற்சாகம் அடைந்தவராகக் காணப்பட்டார்.

"ஏய் மேரீ! உன் சிநேகிதிக்குக் கொஞ்சம் அநாவசிமான கூச்சமும் பயமும், வீண் தயக்கமும் இருக்கு. அதெல்லாம் போயிட்டா இவ பிரமாதமா ஷைன் பண்ணுவா, இவளை அடிச்சுக்க எந்த முன்னணி ஹீரோயி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/82&oldid=1146888" இலிருந்து மீள்விக்கப்பட்டது