பக்கம்:அனிச்ச மலர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

83

தெரியாம ஏதோ ரகசியம் பேசிக்கிறீங்க?" என்று சிரித்துக் கொண்டே திரும்பிக் கேட்டார்.

மேரி சொன்ன வாக்கியம் கேட்பதற்கு என்னவோ போலிருந்தது சுமதிக்கு, இந்த ஆளை விட்டு விடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்' என்று மேரி எதை நினைவூட்டுகிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. அந்தச் சொற்களும் அதை அவள் வெளியிட்ட விதமும் மிகவும் கொச்சையாக இருந்தன, குழப்பமாகவும் தோன்றின.

கார் அபிபுல்லா ரோடில் முன்புறம் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஒரு பங்களா கேட்டுக்குள் புகுந்து நின்றது. பங்களா முகப்பில் குபேரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஒரு போர்டும் இருந்தது.

உள்ளேயிருந்து ஒரு பையன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

"வாங்க! உள்ளே போகலாம்” என்று மேரியையும், சுமதியையும் அழைத்தார் அவர்.

"டேய் பையா ரூம்லே ஏ.ஸி.யைப் போட்டு வச்சிருக்கியா ? மறந்துட்டியா?” என்று படியேறிக் கொண்டே கேட்டார் தயாரிப்பாளர். 

'நீங்க ஃபோன்ல சொன்னப்பவே போட்டு வச்சிட்டேன் சார்!’ என்று பையனிடமிருந்து பதில் வந்தது.

தயாரிப்பாளரை முதலில் படியேறிப் போகவிட்டு விட்டுப் பின்னால் சிறிது தயங்கி நின்ற சுமதி, மேரியிடம், "இவர் பேரு என்னடி? புரொட்யூஸர் புரொட்யூஸர்னே எத்தினி தரம்தான் சொல்றது?’ என்று கேட்டவுடன், "பேரு கன்னையா! ஆனால் பேரைச் சொல்லிடாதே, புரொட்யூஸர் சார் என்ன சொல்றீங்க? புரொட்யூஸ்ர் சார் தூங்கறாரா? புரொட்யூஸர் சார் வந்தாச்சான்னு இந்த மாதிரியே கேட்டுக்கோ, அதுதான் பெரிய மரியாதைன்னு இந்த ஸினி பீப்பிள் நினைப்பாங்க" என்று மேரி அவளுக்குப் பதில் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/85&oldid=1122279" இலிருந்து மீள்விக்கப்பட்டது