பக்கம்:அனிச்ச மலர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85


சுமதியை ஏதோ தடுத்தது. அவளால் மேரியைக் கண்டிக்க முடியவில்லை. கோபிக்க முடியவில்லை. எதிர்த்து விரோதித்துக் கொள்ளவும் இயலவில்லை.

தயாரிப்பாளர் பிரிஜ் டோரைத் திறந்து பாட்டில்களை யும் கிளாஸ்களையும் மேஜை மேலே வைக்கத் தொடங்கினார். சுமதி மெல்லக் குறுக்கிட்டு, "யாரோ டான்ஸ் மாஸ்டரைப் பார்க்கணும்னிங்களே?” என்று கேட்டு வைத்தாள். அதுதான் சமயமென்று "இவள் மாடி யிலே டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக் கட்டுமே பையனோட அனுப்பி வச்சிடலாமா?” என்று மேரி தயாரிப்பாளரை நோக்கிச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஏன் சுமதிக்கு எதுவும் வேண்டாமா ?” என்று தயாரிப்பாளர் மேஜை மேலிருந்த கிளாஸ்களைக் காட்டி மறுபடியும் கேட்டார். மேரி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். தயாரிப்பாளர் மறுபடியும் மேஜை மேலிருந்த மின்சார மணிக்கான பொத்தானை அமுக்கினார். பையன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். .

"டேய்! இவங்களை மாடியிலே டான்ஸ் மாஸ்டரிட் டக் கொண்டு போய்விடு” என்று சுமதியைக் காட்டித் தயாரிப்பாளர் பையனுக்கு உத்தரவு போட்டார்

பையன் பின்தொடரச் சுமதி எழுந்து சென்றாள். மாடிக்குப் படி ஏறுகிற வழியில் ரவிகுமார்-டான்ஸ் மாஸ்டர் என்று பெயர் எழுதி அவரைச் சந்திக்கும் நேரமும் எழுதப்பட்டிருந்தது.

டான்ஸ் மாஸ்டரைச் சுற்றி நாலைந்து இளம் பெண்கள் இருந்தார்கள். பைஜாமா, ஜிப்பா அணிந்த பாகவதர் கிராப்புடன் கையில் வைர மோதிரமும், பற் களில் வெற்றிலைக் காவியும் மின்ன அவன் உற்சாகமாக இருந்தான். சுமதியை அழைத்துச் சென்ற பையன், "புரொட்யூஸர் சார் அனுப்பிச்சாருங்க” என்று சுமதியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/87&oldid=1146899" இலிருந்து மீள்விக்கப்பட்டது