பக்கம்:அனிச்ச மலர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அனிச்ச மலர்

சுட்டிக் காட்டினான். அப்புறம் சுமதி பக்கமாகத் திரும்பி “உள்ளே போங்கம்மா” என்று அவளுக்கு உள்ளே போக விலகி விழி விட்டான்.

“பலே! பலே! டான்ஸுக்குன்னே செதுக்கி வச் சாப்ல உடம்பு, வாம்மா வா..” என்று அவளுடைய உடல் வனப்பைப் பாராட்டியபடியே வரவேற்றான் டான்ஸ் மாஸ்டர்.

சுமதி அவனை வணங்கிவிட்டு, நடு ஹாலில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் நின்றாள். "நீ தலையை ஒயிலாகச் சாய்த்துக் கும்பிடறதே டான்ஸ் மாதிரி இருக்கும்மா.

சுமதி புன்னகை பூத்தாள்.

“உன் பேர் என்னம்மா ?”

“சுமதி.”

“பலே! பலே! பேரும் பிரமாதம்தான்.”

சுமதி ஜமுக்காளத்தில் உட்காருவதா நின்று கொண்டே இருப்பதா என்பது தெரியாமல் தயங்கிய போது, "எங்கே இப்போ நான் அபிநயம் பிடிக்கிற மாதிரி நீயும் பிடி பார்க்கலாம். இன்னும் பாடம்லாம் நிறைய இருக்கு. இது சும்மனாச்சும் ஒரு டெஸ்ட்டுக்குத்தான்” என்றான் டான்ஸ் மாஸ்டர். சுமதி அவன் செய்த மாதிரியே செய்து நின்றாள். அவன் அருகே வந்து அவள் நின்ற பாணியைத் திருத்துவது போல் மோவாய், இடுப்பு, தோள் பட்டையை எல்லாம் தொட்டு, இப்படி இல்லேம்மா. இன்னும் கொஞ்சம் இடுப்பு வளையணும். முகபாவம் மாறணும்-ஏதேதோ சொன்னான். வேறு பெண்கள் முன்னிலையில் அவன் தன்னைத் தொட்டது என்னவோ போலிருந்தது. ஆனால் அந்த வேறுபெண்கள் அதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலக் குஷாலாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் துடுக்குக்காரியாகத் தோன்றிய பெண் ஒருத்தி ஏதோ ஹாஸ்யமாகச் சொல்வதுபோல், "மாஸ்டருக்குப் புது கிராக்கி வந்தாச்சு. இனிமே நம்மை எல்லாம் கவனிக்கவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/88&oldid=1146900" இலிருந்து மீள்விக்கப்பட்டது