பக்கம்:அனிச்ச மலர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அனிச்ச மலர்

யிடம் சொல்லிவிட்டு வாசற்பக்கம் நின்ற பையனைக் கைதட்டிக் கூப்பிட்டு மேரி காருக்குச் சொன்னாள்.

கார் ஸ்டார்ட் ஆகிற சத்தம் கேட்ட சுவட்டோடு முகப்பில் கொண்டுவந்து தயாராக நிறுத்தப்பட்டது.

இருவரும் காரில் ஏறி அமர்ந்ததுமே பிளவுஸில் கையை விட்டுப் பணத்தை எடுத்த மேரி மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைச் சுமதியிடம் கொடுத்தாள்.

"உங்கிட்டவே இருக்கட்டுமே! நான்தான் உனக்கு நிறையத் தரணுமே” என்று அதை வாங்கிக்கொள்ளத் தயங்கினாள் சுமதி. *

"நோ நோ! அதெல்லாம் அப்புறம் தா. வாங்கிக் கறேன். இப்ப இதை ரெஃப்யூஸ் பண்ணாதே. முதல் முதலா நீ சம்பாதிக்கிற பணம் இது” என்று சிரித்தபடியே சுமதியின் கைகளில் திணிக்காத குறையாக அதை வைத்து அழுத்தினாள் மேரி. சுமதி வாங்கிக் கொண் டாள். மறுக்கும் சக்தியும், தடுக்கும் சக்தியும் இப்போது அவளை அறவே கைவிட்டிருந்தன. எதையும் அவளால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கும் அவளால் முடியாது என்ற மறுக்க முடியவில்லை. அவள் மேரியின் கைப்பாவை போலாகி இருந்தாள். அவள் கொடுத்த பணத்தை எங்கே வைத்துக் கொள்வதென்று சுமதி திணறியபோது மேரியே அதை மறுபடி வாங்கி, “நமக்கு இதுதான் பத்திரமான இடம்டி!” என்று அதைச் சுமதியின் பிளவுசுக்குள் திணித்து விட்டாள். அதையும் சுமதியால் தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாததோடு அதற்கு இசைகிறேன் என்பதன் அடையாளமாக, “ஏதோ அவுட்டோர் ஷாட்டிங்ணியே. நாளை எத்தனை மணிக்கு, எங்கே வரணும்? இப்பவே அதைச் சொல்லிடு” என்று மேரியை அவளே வினாவவும் செய்தாள்.

"எங்கேயும் வரவேண்டாம். நீ பாட்டுக்கு ஹாஸ்டல் காம்பவுண்டுக்கு வெளியிலே வந்து பஸ் ஸ்டாப்பிலேயோ டாக்ஸி ஸ்டாண்டிலேயோ காலை எட்டரை மணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/92&oldid=1146904" இலிருந்து மீள்விக்கப்பட்டது