104 எதுவுமே இல்லாதவர்களுக்கு எல்லாமே உள்ளன வென்று இருளில் ஜோதியாக நம்பிக்கை விளக்கேந்தி அன்பின்வழி காட்டி, அவர்களுக்கெல்லாம் அன்னை சாரதாதேவிமாதிரி ஓர் ஆதரிச அன்னையாக விளங்கிவரும் தெரேசா அன்னையும் இப்போது அதே தொழுநோயாளி களைப் பற்றியே மீண்டும் நினைவு கூர் கிறார். "1957-ம் ஆண்டில், எங்களது அன்புத்தொண்டர்கள் அன்புச் சேவகிகள் பணி அமைப்பின் செயலாற்றல் இட்டத்தின்கீழ், தொழுநோயர் நலுப்பிழிவு- ஒன்றும் செயற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஐந்தே ஐந்து குட்ட நோயாளிகள் எங்கள் அன்பின் கழகத்தை நாடியும் தேடியும் வந்தனர். கிடைத்த வேலையைத் தொடர்ந்து கிடைக்க வொட்டாமல் சதிபண்ணின பயங்கரமான நோயின் காரணமாகவே, அவர்கள் வேலையை விட்டு விலக்கப்படவே, அவர்களுக்கு வாழ்க்கை மட்டுமல்லாமல், உயிரும் ஒரு சிக்கலாக ஆயிற்று. உண்ண உணவு இல்லை; படுக்க இடம் கிடையாது; நோய் தீரவும் நோயைத் தீர்க்கவும் மார்க்கம் கிடைக்க வில்லை. இந் நிலையிலே தான்,அவர்களுக்கு எங்கள் அன்பு மனையின் பாசக் கதவுகள் திறந்துவழி விட்டன. இல்லத்தின் மண்ணே மிதித்தது தான் தாமதம், அவர்கள் ஐவருக்காகவும் நாங்கள் கவலைப்பட்டோம்; கண்ணிர் விட்டோம்; பிரார்த்தனையும் செய்தோம். பெரு வியாதிக்காரர்களான அவர்கள் ஐந்து பேரும் கண்ணிர் வெள்ளம் கரைபுரள, நா தழதழக்க, உணர்ச்சிப் பெருக்குடன் கடவுள் கல் ஆன பாங்கில் அப்படியே நின்றர்கள்!-அது ஆனந்தக் கண்ணிராம்! சொன்னர்கள் அவர்கள். இருக்கலாம்!-உண்மைதான் நம்பினுேம்! . அன்னயும் அன்னையின் சகோதரிகளும் தெய்வத்தின் பால் கொண்டிருக்கும் நேசமான அன்பைச் செயல் வடிவில் மெய்ப்பித்து வருகிறது அறநெறிப் பணி நிறுவனம்! -
பக்கம்:அன்னை தெரேசா.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை