111 - அழகான அமைதியின் இருப்பிடமான இந்நகர் தொழு நோயாளிகளுக்கும் அழகு தருவதாகவே அமைந்தது. ஏனெனில், இங்கே அவர்களுக்கென்று சொந்தமாக ஒர் இடம் அமைந்திருந்தது. அக மகிழ்வோடு வாழலாம்: அமைதியாக வேலை பார்க்கலாம்; மானம் மரியாதையோடு மடியலாம், சகோதரி ஃபிரான்விஸ் ேஸ் வி Այ iք டாக்டராகத் துணை நிற்கையில், அவர்களுக்கு-சாவைச் சாடிய ஆண்களும் பெண்களுமான அவர்களுக்கு என்ன குறை?- தொற்று நோயின் கடுமையாலும் கொடுமை யாலும் அங்கம் குறைந்தவர்களும்கூட, அறுவைச் சிகிச்சை மூலம் புது உயிர்பெற்று மீண்டும் ஒடவும் ஆடவும் பலம் பெற்றபின், உண்மையிலேயே இனிமேல் அவர்களுக் கெல்லாம் குறை இல்லைதான்! டில்லிக்கு வெளியே மற்ருெரு சாந்தி நகர் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் தொழுநோயரின் இன்னுெரு தேவலோகமாக விளங்கும்! அன்னையின் பரிசுத்தமான அன்பு தொடுகின்ற இடமெல்லாம் தேவலோகம் தான்! சுதந்த்ரப் பாரதத்தின் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் மரங்ார்ந்த நாகரிகப் பாங்குடன் கூடிய சேதுப்பாலமாக விளங்கி வருகின்ற கல்கத்தா நகரத்தில் ஆச்சாரிய ஜகதீஷ்போஸ் சாலையிலேதான், இன்றைய நடப்பு உலகத்தின் வணக்கத்துக்கும் வாழ்த் துக்கும் உரியதாக விளங்கிவருகின்ற அன்னே தெரேசா அவர்களின் அன்பின் தூதுவர்கள்’ (Missionaries of Charity) அறப்பணி இயக்கத்தின் தலைமைப் பணியகமான 'அன்னே இல்லம் (The Mother House) இயங்கி வருகிறது. அன்னை தெரேசா தாம் தங்கி வந்த க்ரீக் தெருவில் 14ஆம் எண்பூண்ட இல்லத்தின் மாடியறையில் அன்பை ஓர் இயக்கமாகவே உருவாக்கி, அந்த இயக்கத்திற்கு
பக்கம்:அன்னை தெரேசா.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை