6. அம்மா!-அம்மா!' 'அம்மா!...” பாசத்திற்குத் தாரகமந்திரம். அன்பிற்குத் தேவாமிர்தம். அம்மா என்ருல் அன்னை. ஆனல் அன்னையென்ருல், அது அன்னை தெரேசாவையே குறிக்கும். இதுவே நடைமுறை உலகத்திலே, நடை முறையில் இருந்துவரும் உண்மை. அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் கருணைக்காகவும் ஏங்கிய - ஏங்குகின்ற-ஏங்கு ம் அத்தனை ஜீவன்களுக்கும் உலகத்தின் அரங்கத்தில் ஒரு நம்பிக்கைத் தீபமாக ஒளி காட்டி, வழிகாட்டி வருகின்ற அன்னை தெரேசா அவர்கள் தமது அறப்பணி அமைப்புக்களின் வாயிலாக உலகிடை அன்பிற்குத் தூது சென்று ஏழைநலத் தருமப் பணிகள் புரிந்து உலகத்தின் நல்லமைதிக்கும் நல்லெண்ணத்துக்கும் காப்பாகவும் பாதுகாப்பாகவும் விளங்கி வருகின்ற அந்த ஓர் ஒப்புயர்வற்ற மனிதாபிமானத்துக்கு நன்றி தெரி விக்கும் வகையிலேதான், 1979-ம் ஆண்டுக்குரிய உலக அமைதிக்கான நோபல்பரிசு அன்னையைத் தேடி வந்தது. தமக்குக் கிடைத்த உலகத்தின் மிகச் சிறந்த பரிசிலான இந்த நோபல் பரிசு, அன்பின் தூதுவர்கள் சார்ந்த தமது அறப்பணி இயக்கத்துக்குக் கிடைத்ததாகவே அன்னை
பக்கம்:அன்னை தெரேசா.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை