பக்கம்:அன்னை தெரேசா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 செய்து ஆரம்பம் செய்த அன்புப் பணி இயக்கத்தின் சொத்தாக ஆகிவிட்டவர் அன்னே! ஆகவே, அன்னேக்குக் கிடைத்திட்ட ரூ 15,20,000 மதிப்பு மிக்க நோபல் பரிசும் ஆ? இயக்கத்தின் சொத்தாக் ஆகிவிட்டதில் வியப்பேதும் இல்லைதானே? பரிசுபெற்று இந்தியாவுக்கு மீண்ட அன்னைக்கு டில்லி 'தகராட்சி செங்கோட்டையில் மாபெரும் வரவேற். பளித்தபோது, வெறும் பணக்காரர்களை மட்டுமே விழா நிகழ்ச்சியில் கண்டு மனம் நொந்தவராக, இப்போது சி" ஒர் ஏழையைக் கூடச் சந்திக்க முடியவில்லையே? அவர்களையெல்லாம் ஏன் வெளியிலேயே நிற்க வைத்து விட்டீர்கள்?? என்று வினவிய அக்கேள்வி தலைநகரில் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

  • சால்மார்க்ளின் பொதுவுடைமைக் கொள்கையில் பற்றும் பாசமும் மிகக் கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வர் டாக்டர் பி. சி. ராய் தொடக்கம் முதற்கொண்டு *ன்யி-மும் பற்றும் பாசமும் கொண்டிருந்தார். *கும் கல்கத்தாவில் அன்னைக்கு வரவேற்பொன்றை அளித்தார். அப்போது அவர், 'அன்னை அவர்கள் என்னைத் தெய்வசக்தியில் நம்பிக்கை வைக்குமாறு செய்கிருர்!" என்பதாகக் குறிப்பிட்டதும் ‘தாள் செய்தி ஆயிற்று!

1980 : . தம் பெருமையும் பெருமிதமும் அடையத்தக்க வழியில் பாரதத்தின் குடிமகளாக ஆகி, நாளும் பொழுதும் செயலாற்றும் மக்கள் தொண்டின் வாய்மொழியின் வாயிலாக அன்புக்குத் தூது சென்று இன்பநிலை எய்திப் பாரதத்தின் விலைமதிப்பு வாய்ந்த ரத்தினமாக ஆகிவிட்ட உலகத்தின் அன்பு அன்னே தெரேசாவுக்குப் பாரத ச் சமுதாயத்தின் மிகச் சிறந்த, மிக உயர்ந்த பாரத ரத்னம்’ விருதைப் பாரதக் குடியரசின் தலைவர் மேதகு நீலம் சஞ்சீவ ரெட்டி வழங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/125&oldid=736261" இலிருந்து மீள்விக்கப்பட்டது