126 பாரத ரத்தினம் ஜவஹர்லால் நேரு அவர்கள், ஜனநாயக சோஷலிஸ் தருமத்தின் அன்பு வழி நின்று, உலகச் சமமதானத்தையும், ஒத்துழைப்பையும் பரஸ்பரம் நல்லெண்ண நட்புறவையும் வளர்ப்பதில் பாரதத்தின் மிகப்பெரிய பொறுப்பை மெய்ப்பித்தார். ஆசிய ஜோதியின் வாழ்க்கைச் சரித்திரம்-சரித்திர வாழ்க்கை (1889-1964) என்றென்றும் உலக ஜோதியாகவே ஒளி கூட்டும்; வழி காட்டும்! தந்தையின் உலகறிந்த அன்புடைமைக் கொள்கை யிலே மரபு வழி நின்று, அண்மையில், நாட்டின் தலைநகரில், புதுடில்லியில் கூட்டுச் சேராக் கொள்கையில் சார்புடைய உலகத்தின் நடுவுநிலை நாடுகளையெல்லாம் ஒன்று கூட்டி மாநாடு நடத்தி உலகரங்கில் தமக்குள்ள நற்பெயரை மேலும் வலுப்படுத்திக் கொண்ட பாரதப் பிரதமர் மேதகு இந்திரா காந்தி, சர்வதேச உறவுகளில் சமாதானச் சகவாழ்வுக் கோட்பாடுகளை வலுப்படுத்தி நிலை நாட்டுவதன் விளைவாகவே, உலக மக்களின் நலன்கள் சீரடையவும் செம்மைப்படவும் வாய்ப்பு வசதி ஏற்பட முடியுமென்பதை அப்போதும் வலியுறுத்தினர்கள்!--இவ் வழியில், 1983 ஆம் ஆண்டு, அன்பும் அறனும் உடைய தாகவே வரலாற்றில் இடம் காணும்! • முதன் முதலாக, 1975-ம் ஆண்டில் 20 அம்சத் திட்டத்தை அறிவித்த திருமதி காந்தி 1982-ம் ஆண்டிலே புதிய 20 அம்சத் திட்டத்தையும் பொதுமக்களின் சந்நிதானத்தில் ச ம ர் ப் பி த்தார்!-அப்போது, 1982 ஜனவரி 14ல் பிரதமர் நாட்டுக்கு ஒலிபரப்பிய உரையில், நாட்டிலே ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமே இல்லாத நிலையிலே, பொதுமக்களின் பொது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் முதற் கடமையாக விளங்குமென்றும், ஒழுங்கு ம் லட்சிய உணர்வும் நல்லிணக்கமும் கடும் உழைப்பும்தான் தேசிய வாழ்வை வலுப்படுத்தக் கூடுமென்றும், உண்மைக்கும் உழைப்புக்கும்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை