பக்கம்:அன்னை தெரேசா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

 கொண்டிருப்பவர்கள், போதை மற்றும் மருந்துகட்குக் கொத்தடிமை ஆனவர்கள் முதலான ஏழைகளிலும் ஏழை களான ஆடவர்-மகளிர் உலகத்தின் எந்த மூலைமுடுக்கு களில் இருந்தாலும் சரி, அங்கெல்லாம் அன்னையின் அன்பின் துரதுவர்கள், கன்னிச் சகோதரிகள், தூய சகோதரர்கள். உடன் உழைப்பவர்கள் மற்றும் ச மூ க ந ல ப் ப னிை ஆர்வலர்கள் என்னும் வெவ்வேறு அமைப்புக்களாகச் செயற்பட்டு வருவதும் உலகறிந்த அன்புச் செய்திதான்!
அதிசயிக்கத்தக்க அன்னை தெரேசாவின் அறம் சார்ந்த நற்பணிகள் ஆழிசூழ் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரவி யுள்ளன; இவ்வகையில் முக்கியம் பெறும் நாடுகள் ஐம்பத்திஒன்றுக்கும் கூடுதலாகின்றன. செயலாற்றும் இல்லங்கள் இருநூற்றிப்பன்னிரண்டுக்கும் அதிகம். இரண் டாயிரத்துக்கும் மி ஞ் சி ய தூய சகோதரிகளும், நானுாற்றையும் தாண்டிய அன்புச் சோதரர்களும் ஆயிரக் கண்க்கான உடன் உழைப்பாளர்களும் இப் பணிகளில் பாகம் பெறுகிரு.ர்கள். மேலும் இந்தியாவில் மட்டுமே காற்றுப்பத்துக்கும் மேற்பட்ட அன்பு மையங்கன் இயங்கி வருகின்றன! (1982)
இந்த உலகநலப் பொதுச்செய்தியையும் உலக ஏடுகள் அத்தனையும் அறியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/147&oldid=1674209" இலிருந்து மீள்விக்கப்பட்டது