8.இயேசு வாழ்கின்ற ஏழைகளின் சிரிப்பு
தமிழகத்தின் முதல்வர் டாக்டர் எம். ஜி. இராமச் சந்திரன் அவர்கள் ஏழை மக்கள் வாழ்வு பெறவும் வளம் பெறவும் அரசுரீதியாகவும் நடவடிக்கைகளே அவ்வப் போது மேற்கொண்டு வருவதை நாடும் வீடும் உணரும். தமிழ் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் கிராம நகர்ப்புற அபிவிருத்திக்காக, ஆரம்பப்பள்ளிக் குழந்தைகன் 38 லட்சம் பேருக்குக் கிட்டத்தட்ட 100கோடி ரூபாய். செலவில் தினமும் இலவசமாக மதியச் சத்து உணவை வழங்கும் நல்லதொரு திட்டத்தை மாண்புமிகு முதல்வர் 1-7-1982-ல் ஆரம்பித்து வைத்தார்!
அன்பு கூடிய ஏழைமக்கள் பணிகளைத் தேசிய நற்பணி களாக உலகம் தழுவிய வழிகளில் செயற்படுத்தி வருகின்ற அன்னே அவர்கள் மக்கள் தலைவருக்குத் தாய்’ இதழ். வாயிலாக வாழ்த் துத் தெரிவித்ததும் குறிக்கத்தக்க நடப்பு ஆகிறது.
அன்பே அகலாகவும், ஆர்வமே நெய்யாகவும் கொண்டு அன்புப் பணிகளையும், அறப்பணிகளையும் ஆண்டவனுக்குத் தருமமாகவும், சத்தியமாகவும், உண்மை யாகவும் ஆற்றி வரும் அன்னைக்குத் தமிழ்கூறு நல்லு லகத்தின் சார்பில் நன்றி வணக்கங்களைத் தாய் இதழ். தெரிவித்த காலையில், தமது இயக்கத்தின் சார்பில் அன்ளே நல்வாழ்த்துதல்களேத் தெரிவித் துக் கொண்டார்: