பக்கம்:அன்னை தெரேசா.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


ரூபாயைக் கொண்டு ஆரம்பித்த அன்னையின் 'அன்பின் துதுவர்கள் 'சபை முப்பத்து இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு மாபெரும் அளவில் வளர்ந்து பாரெங்கும் பரவியுள்ளதே, இதுதான் நாம் பார்த்துக் கொண் டிருக்கும் உலகப் பெரும் புதுமை!" (1982)
தமிழகத்தின் கத்தோலிக்க ஆயர் க ள் பங்கேற்கும் 'நம் வாழ்வு' வெளியீட்டுச் சங்கத்தின் செயலர் அந்தோணி ராஜராஜன் உயிர் வாழும் புனிதை யான அன்னையின் அன்புப் பணி அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைமை இல்லமான தேவன் இல்ல'த்தில் அன்னையைக் கண்டு பேசியபோது, (1982) அன்னை மனம் மகிழ்ந்து விவரங்கள் பலவற்றை வெளிப்படுத்தினர்கள்:
எங்களது அமைப்பு இயக்கத்தோடு தொடர்பு பூண்ட அன்புப் பணியாளர்களில் மூன்று பிரிவினர் உள்ளனர். எங்களுடைய பணிகளில் ஒத்துழைத்து எங்களுக்காகச் செபிக்கும் உடன் உழைப்பாளர்கள் (Co-workers). எங்கள் பணிகளின் வளர்ச்சியின் நிமித்தம், தங்களுடைய உடல் மற்றும் உள்ளக் கஷ்ட நஷ்டங்களை இறைவனுக்கு இன்முகத்துடன் அளித்துப் பிரார்த்தனை செய்கின்ற நோய்நொடியாளர்கள்(The sick and the sufferings). மற்றும் எங்களது தொண்டுகளின் மேன்மைக்கெனத் தியானிப்பவர்களாகிய தி யா கி கள் ஆகிய மூன்று பிரிவினரில் எல்லா மதத்தினரும் உண்டு.
எங்கள் பணி இயக்கத்தில் முக்கியமான மூன்று புனிதச் செயல்களில் எங்கள் சகோதரிகள் பயிற்சி பெறுவார்கள்இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்தல், அன்பு செய்தல், எப்போதும் மகிழ்வோடு இருத்தல் ஆகியவை பிரதானம் ஆனவை. மன அமைதி, உடல் அமைதி, புலன் அடக்கம், கற்புநிலை காத்தல் போன்ற நற்குணங் களையும் கற்பிப்போம். இயேசு தம்மைத் தாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/152&oldid=1674587" இலிருந்து மீள்விக்கப்பட்டது