பக்கம்:அன்னை தெரேசா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

 தாழ்த்திக் கொண்டதுபோல, தங்களைத் தாழ்த்திக் கொண்டு தாழ்ச்சியுடன் வாழவும் அவர்களுக்கு வழி காட்டுகிருேம்!”
பேட்டியாளர் அந்தோணி ராஜராஜன்: அன்னையே! தங்களது அன்புப் பணியின் உள்நோக்கம் மதம் மாற்று வதா, என்ன?”
அன்னை: "இல்லவே இல்லை! நாங்கள் பிறருக்கு உதவும் போதும், பிறருக்காகப் பணியாற்றும்போதும், யாரிடமும் மத மாறுதல் பற்றிப் பேசுவதில்லை. அனைவரி டத்திலும் நாங்கள் இயேசுவைத் தரிசிக்கிருேம். அவர் களாக முன் வந்து மனம் மாறுவதையே எதிர்பார்க்கிருேம்!"
"அன்னையே! கல்கத்தாப் பெருநகரிலே உங்களது சாதனை பற்றிச் சொல்வீர்களா?”
*நடுத்தெரு அைைதகளாகக் கிடந்த நாற்பத்தி ரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைகளை நாங்கள் எங்கள் நிழலுக்கு இதுகாறும் அழைத்து வந்து ஆதரவளித் திருக்கிருேம்!” (1950-82)
"குடும்பக் கட்டுப்பாடு, கருக்கலேப்பு பற்றிய தங்களது கருத்தை அறியலாமா?"
"கருவைக் கலைப்பது, கொலை செய்வதைப் போலவே சட்டவிரோதச் செயலாகும். ஆனால், நான் இயற்கை வழிக் குடும்ப நலத் திட்டத்தைத்தான் ஆதரிக்கிறேன். இவ்வகையில், எங்களது போதனையின் விளைவாக, சுமார் ஒன்றரை லட்சம் குழந்தைகளின் பிறப்புக் குறைவடைந்துள்ளது!",
அன்பையே உயிராகவும், உயிர்ப்பாகவும் ஆக்கிப் பொங்கும் புனலாக அன்பின் தொண்டுகளைக் கடை யரினும் கடையருக்காக அன்றிலிருந்து இன்றுவரை செய்து

        அ.தெ.........10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/153&oldid=1674588" இலிருந்து மீள்விக்கப்பட்டது