பக்கம்:அன்னை தெரேசா.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

 வடிவில், நாம் இறைவனக் காண்கிருேம், நமது அன்புப் பணிகளில் ஏழைகளிடம் ஆண்டவனை உடலோடும் உயி ரோடும் ரத்தத்தோடும் காண்கிருேம்!
இறைவா! பிறரிடம் ஆறுதல் தேடுவதை விட, பிறருக்கு நான் ஆறுதல்தரவும், பிறர் என்னைப் புரிந்திடல் வேண்டுமென்பதைவிட, நான் பிறரைப் புரிந்து கொள் ளவும், பிறர் எனக்கு அன்பு செய்தல் வேண்டுமென்பதை விட, பிறருக்கு நான் அன்பு செய்திடவும் அனுக்கிரகம் செய்!-ஏனெனில், தன்னல மறுப்பிலேதான், பொது நலமும், மன்னிப்பதிலேதான் பெருமன்னிப்பும், மரிப் பதிலே தான் மரணமில்லாப் பெரு வாழ்வும் சித்திக்க முடியும்!”
மனிதாபிமானம் சிறக்கவும், பெண்மை நிறக்கவும், தாய்மை சிலிர்க்கவும் அன்னே நிறுவிய அன்பின் இயக் கத்தில் உடலில் உயிராக, தெய்வத்திற்கு அழகான தத்து வம் ஒன்றும் பொதிந்து கிடக்கின்றது. உண்மைத் தவத்தின் உயர்வான தத்துவம்.
அன்னை சொல்வார்கள்: "எங்களது இயக்கத்தின் சகோதரிகள் செபத்தையே தங்கள் சமூக சேவையின் மையமாகக் கொண்டு வாழ்வதால், ஆண்டவனின் அழைப் பாணக்கு விசுவாசமாக, தங்களுடைய அன்புப் பணி வாழ்வில் உறுதியாகவும் இருக்க முடிகிறது!"
ஒன்றே தெய்வம்!- ஒருவனே தேவன்!"
உலகம் கண்ட உண்மை இது.
உலகம் கொண்ட நியமம் இது.
ஆனலும், கடவுளுக்குதான் எத்தனை, எத்தனை வடி வங்கள்!
'பால்வாய்ப் பசுந் தமிழில் உயிர் வாழ்கின்ற கவி யரசு கண்ணதாசன், உலகிடைக் கடவுளின் நிலையை உயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/155&oldid=1674842" இலிருந்து மீள்விக்கப்பட்டது