160
பாருக்குள்ளே நல்ல நாடான பாரத நாடு, இந்த இருபதாம் நூற்ருண்டில் அதிசயமான வரலாற்று நிகழ்ச்சிகளை அதிசயிக்கத்தக்க அளவில் சந்தித்துள்ளது.
நாட்டிற்கு அன்பு வழியில் விடுதலை வாங்கித் தந்த தேசத் தந்தை நாட்டின் கீழ்மட்டத்து மக்களின் நல்வாழ்வுக்கென அல்லும் பகலும் பாடுபட்டார். அன்பு சோதிக்கப் படுமானல், தருமம் பொறுப்பதில்லை என்பதற்கு அண்ணலின் மரணம் ஒரு வரலாற்றுச் சாட்சி யாகவே அமைந்தது.
அண்னலின் அறவழியில் நாட்டுப்பணி ஆற்றினர் பண்டித ஜவாஹர்லால் நேரு. ஆசிய ஜோதி அவர்; உலகின் சமாதானப் புருவாகவும் ஒளிர்ந்தார்.
தந்தையின் அன்பு வழியில் உலக அமைதிக்காகத் தொண்டாற்றிவருகிருர் உலகத் தலைவி இந்திரா காந்தி. பாரதத்தின் பிரதமர், உலகத்தின் மக்களுக்கும் அன்னை இந்திரா காந்தியாகவே இப்போது விளங்கிவருகிருர்!
அன்பு வெல்லும்!
இது கதையல்ல!
வரலாறு!
அன்பிற்கு ஓர் அன்னையென உலக மக்களால் ஏற்றிப் போற்றப்பட்டுவருகின்ற அன்னை தெரேசாவின் வரலாறு, அன்பின் வரலாறு அல்லவா? அன்னை அவர்களின் அன்பு, உலகத்தின் மிகச் சிறந்த நோபல் பரிசை வென்ற தென்றல், அன்பின் மகிமைக்கு ஈடு எடுப்பு உண்டா, என்ன?-இல்லை, எல்லையற்ற அன்பின் மறுவடிவான ஆண்டவனின் நற்கருணைக்கு எல்லைதான் இருக்கமுடியுமா, என்ன?
அன்றைக்கு...
யூகோஸ்லாவிய நாட்டில் ஸ்கோட்ஜி எனப்பட்ட குன்றுப்புறக் கிராமத்தில் அல்பேனியப் பெற்ருேர்களின்