166
தொட்டுத் தொட்டு முத்தமிட்ட காட்சி உள்ளத்தைத் தொட்டது.
தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பில் ஒரு பகுதி இறப்போர் நல இல்லத்திலும் இடம் பெற்றது.
"கல்கத்தா மாநகராட்சி-நிர்மல், ஹ்ருதே!” வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் அவ்வில்லத்தை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்த பெயர்ப் பலகை இல்லத்திற்கு வெளிப்புறத்தில் பளிச்சிட்டது!-மரியாளின் நிர்மலமான திரு இதயத்தின் புனிதம் அங்கே ஆடி வரும் தேனுக ஓடி வந்தது.
இல்லத்தின் சுற்றுப் புறச்சூழல்களே சூரிய வெளிச் சத்தில் நிழற்படப் பதிவாளர் எச்சரிக்கையோடு படமாக் கினர்; ஆல்ை, இல்லத்தின் பகுதி ஒரே இருட்டாக இருந்ததால், புகைப்படக் கருவி எதையும் பதிவு செய் யாது என்று அவர் கூறினர்.
இல்லத்தின் உள்ளே போதுமான வெளிச்சத்தை உண்டுபண்ண நேரமில்லையென்று கருதினர், மால்கம். ஆகவே, இயன்றமட்டில், படங்களே எடுத்துப் பார்க்குமாறு பணித்தார்.
எடுக்கப்பட்ட படச்சுருளேக் கழுவிப் பார்த்ததும். புகைப்பட நிபுணரே மலைத்துப் போய் விட்டார்!
"நாம் இல்லத்தின் உட்புறத்தில் எடுத்த படங்கள் எல்லாமே வெகு அழகாக அமைந்து விட்டனவே? தொழில் நுட்ப ரீதியின்படி, இருட்டிலே எப்படிப் படம் ஆக்க முடியும்? ஆளுல், எடுக்கப்பட்ட ஒளிப் படங்களில் தவழ்கின்ற அந்த வெளிச்சம்-ஒளி எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது?"
இருட்டறையில் நின்ற அன்னையின் முகத்தில் தெய்விகக் களை பளிச்சிட்டது! அது தெய்விகமான ஒளி ஆயிற்றே!-இருட்டில் அல்லற்பட்டும் தொல்லப்பட்டும்