174 அது போலவே.நாமும் மற்றவர்களே அன்புடன் நேசிப்போமாக!” துறவுக்கன்னியர் வெண்ணிற ஆடைகளில் துல்லிய மாகப் பளிச்சிட, துல்லியமான கீதங்கள் பிரார்த்தனை கனாக ஒலியும் ஒளியும் கூட்டுகின்றன. முதல் நிலையாக அமைந்திட்ட அன்புமேவிய அற நெறிப்பணி இயக்கத்தின் பல்வேறு துணை அமைப்புக் களுக்குச் சென்று பார்வையிடும் கடமைப் பொறுப்பைக் காலை எட்டுமணிமுதல் மேற்கொள்வார், அன்னை தெரேசா. டச்சு அரசு நன் கொடையளித்த வண்டி அன்னேக்குப் பெரிதும் உதவும். . அதிகக்கே: சகோதரிகன் பல்வேறு அணிகளாக இயங்கிக் காரியங் களைச் செய்வார்கள். குட்ட நோயாளிகளைக் குளிப் பாட்டுதல், மருந்து இடுதல், நோயாளிகளின் துணிமணி களைத் துப்புரவு செய்து உலர்த்துதல் போன்ற பணிகள் சுறுசுறுப்போடு நடைபெறும். வேறு பகுதிகளில் உணவு தயார் செய்யும் அலுவல்கள் இடம் பெறும். இல்லங் களின் தரைகளைக் கழுவி மெழுகிச் சுத்தம் செய்வதில் வேறு சிலர் ஈடுபடுவார்கள். இப்படிப்பட்ட பணிக்கடன்களிலும் அன்னை பங்குப் பணி ஏற்பது இயல்பேதான்! . . . . . . . . . பணி முறைகளை மேற்பார்வையிட்டபிறகு, காலையில் சுமார் 11 மணி அளவில், அன்னை தெரேசா. அன்னை இல்லத்திற்குத் திரும்புகிரு.ர். - அங்கே பிரதான முகப்பு மண்டபம்.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை