182
விரைவில் இருநூறு ஆகும். பொது மருத்துவர் நிறுவனங்கள் இருநூற்றைத் தாண்டி விட்டன. தொழு நோய் மனைகள் ஐம்பத்தைந்து: எண்பத்தைந்தை எட்டிப் பிடிக்கின்றன இறப்போர் நல விடுதிகள். கழிந்த ஆண்டில், அன்பு மனையின் 670 நடமாடும் மருத்துவ மனைகளின் மூலம் 60 இலட்சம் மக்கள் பயன் பெற்றனர்! (1983).
சமயத்தைப் பரப்பும் ஏசுத் தொண்டர்கள் உலகில் 30,000 எண்ணிக்கையுடன் சேவை புரிகிருர்கள்.
ஆனாலும், அன்னேயின் அன்பு இல்லத்துக்கு அன்டை - பரப்புதல்தான் ஆண்டவன் ஆணே. சுமார் 2500 அள விலான சகோதர சகோதரியர்க்கு அன்புத் தூதுதான் வாழ்க்கைத் தொழில். இவ்வகையில் உலகம் பரவி நிரவியுள்ள இல்லங்கள் விரைவில் முந்நூறு ஆகிவிடலாம். நாள்தோறும் ரூபாய் பத்து லட்சம் மதிப்பு மிக்க உணவு களும் உடைகளும் மருந்துகளும் ஏழைகட்கு வாரி வாரி வழங்கப்படும். வயிற்றுப் பிழைப்புக்கு வழி கற்பிக்கப் பட்ட ஏழைப் பெண்டிர் 12000 பேர் (1983).
அன்று:
இந்தியமண்ணில் அன்பிற்கு விதை துவினர் அன்னே!
இன்று:
உலக நாடுகளிலெல்லாம் அந்த அன்பு முப்போக விளைச்சலை வழங்கிக் கொண்டிருக்கிறது!
அரசியல், கட்சி, மதம் போன்ற குறுகிய மணப் பான்மை படைத்த குறுக்குச் சுவர்களையெல்லாம் கடந்து, பரந்த சமுதாயமக்களோடு ஒன்றிப் பழகி அவர்களுக் கெல்லாம் அன்பு செய்வதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, மக்களையும் மக்கள் அன்பையும் வாழ்த்தி வா." விக்கும் அன்னையாக-ஒப்பாரும் மிக்காரும் இல்லாததே. அன்னையாக விளங்கும் அன்னை தெரேசா அவர்கல்