37 பிறக்கிருன்; இறக்கிருன்!” என்கிற இருதுருவ விதி முறையோடு, மனிதனின் கதை முடிந்துவிடலாமா, என்ன? --கூடாது; கூடவே கூடாது! மனிதனின் கதை மகத்தானது; மாண்பு மிக்கது; மகிமை மிகுந்தது. . . - பிற விக்குப் பயன் வேண்டும்; பயன் பெற Galar®ಕು; பயன் தர வேண்டும். - - இறந்த பிறகுங்கூட, மனிதன் வாழ வேண்டாமா? அப்போதுதானே, மனிதன், மனிதன் ஆக நிறைவு பெற இயலும்!. . இதுவும் மனிதனின் கதைதானே? உண்மை : - - ஆமாம்; தெரேசாவின் கதையும் இவ்வாறே அமைய நேர்ந்தது; அமையவும் செய்தது. - - தெரேசா, பதினேழு வயதுக் கன்னி அக்னெஸா இருந்த அந்த நாளிலேயே, தன்னை ஏசுநாதருக்கே அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்தாள்; தன்னுடைய குறிக்கோளைத் தாய் தந்தையரிடம் வெளிப்படுத்தினுள்! "மகளே, நிச்சயமாகவேதான் நீ இவ்வாறு முடி வெடுத்திருக்கிருயா?’ - - "ஆமாம், அம்மா, வாழ்க்கையிலே பாவப்பட்ட கடைநிலை மக்களுக்குப் பரிவுடன் பணி விடைகள் செய்து, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் உண்டாக்கு வதிலேயே நான் என்னுடைய எதிர்காலத்திலே அமைதியும், மகிழ்ச்சியும் அடையப் போகிறேன். என்னுடைய இம்முடிவை ஆண்டவனின் கட்டளையாகவே நான் மதிக்கிறேன், தாயே!” "ஓ! அப்படியா?” "zais!”
பக்கம்:அன்னை தெரேசா.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை