பக்கம்:அன்னை தெரேசா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாட்டைத் துறந்து, சமூகத்தால் தட்டிக் கழிக்கப்பட்ட அைைதகளுக்கெல்லாம் அன்பைக்கூட்டி, தன்னலத்தைக் கழித்து பாசத்தைப் பெருக்கி, மனிதத் தன்மையை வகுத் துப் பணிபுரிய வேண்டுமென்ற சீரிய நோக்கம் சிந்திக்கப் பெற்றவராகி, பாருக்கெல்லாம் ஈடான பழம்பெரும் நாடான பாரதத் திருநாட்டின் புனித மண்ணே மிதிக்கும் அருள்மிகு அதிசயத்தைச் சந்தித்த அந்த ஆண்டு 1929, மெய்யாகவே அதிசயம் மிகுந்த ஆண்டாகவே அமைந்திருக்க வேண்டும்! அந்தக் கன்னித் துறவிதான், பின்னர் தெரேசா எனப் பேர் பெற்ற அக்னெஸ்!... "சாதி, மதம், மற்றும், இனத்திற்கு அப்பாற்பட்ட அன்பு என்பது ஒருபோதும் கேட்பதில்லை; எப்போதும் கொடுக்கவேசெய்யும்!’ என்னும் அன்பின் தீபாராதனையை உலகிடை வாழ வைத்து வாழ்த்தவும், விடுதலை தவறிக் கெட்டுக் கிடந்த அன்னே சுதந்தர தேவியின் கை விலங்கு களே அறவழி நின்று அறுத்தெறியவும், பாரதத்தாயின் மக்கள் அனைவரையும் ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமே இல்லாத மனித ஜாதியின் மன்னர்களாக ஆக்கி, சமதருமச் சன்மார்க்க நெறிமுறையில் அன்பின் முறை நெறி சார்ந்த ராம ராஜ்யத்தை உருவாக்கவும், தமது உடல், பொருள், ஆவி அனைத்தையுமே தாய் மண்ணுக்குத் தத்தம் செய்து அல்லும் பகலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பொதுநல மனிதப் பண்பாளராகப் பாடு பட்டு உழைத்துப் பணி செய்து கொண்டிருந்த அண்ணல் காந்தி அடிகளின் தாய்த் திருநாட்டிலே பெருமையோடும் பெருமிதத்தோடும் கன்னி அக்னெஸ் காலடி எடுத்து வைக்க வாய்த்த அந்த நல்வாய்ப்பு, வாழ்க! வாழ்க! அக்னெஸ் பெறற்கரியதாகப் பெற்றிட்ட பொன்னை அந்நல்வாய்ப்பு, அவரது மக்கள் நலப்பணி நடவடிக்கை களுக்குக் கிடைத்திட்ட முதற்படியான நல்வாழ்த்தாகவும் அமைந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/40&oldid=736351" இலிருந்து மீள்விக்கப்பட்டது