42 களிலும் புத்தம் புதிதான தெய்விக ஒளி மேலோங்கிக் கிடத்தது அல்லவா?- அந்த தூய ஒளிக்கு அப்போது கிடைத்த தெய்விகத் தன்மைக்கு இப்போது பொருள். கிடைத்து விட்டதில், அக்னெஸ் அடைந்த பெருமை அளவிடற்கரிது. அக்னெஸ் சுயப்பிரக்ஞை கொண்டார். இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்!” என்கிற பரிசுத்த மாண நல்லுணர்வு அவரது கன்னி மனத்தில் மேலும் வல்லமை பெற்றது. 'உன்னைப் போலவே, உன்னுடைய அயலவனையும் நேசிப்பாயாக!' என்னும் பைபிள் பொன் மொழி எதிரொலிக்கிறது! "மக்கட்கு உதவி செய்ய வேண்டுமென்று மனப்பூர்வ மாக விரும்புவோர், தமது சொந்தச் சுகதுக்கங்களையும், புகழையும், எல்லாவகை இச்சைகளையும், ஆசாபாசங் களையும் முதலில் களைந்துவிட்டு இறைவனிடம் வர வேண்டும். இறைவன் ஏழைகளிடம்தான் இருக்கிருன்! மேலும், அவர்கள் பூமிதேவியைப் போன்று அனைத்தையும் பொறுப்பவராதலும் வேண்டும்; பின், அவர்களின் காலடியில் உலகம் சரண் அடையும்! - முன்னுணர்வுடன் கூடிய விவேகானந்தரின் ஞான ஒளி மிகுந்த வீரமுரசின் ஞான ஒலியில், வழிநடந்த அக்னெஸ், ஒரு பால சந்நியாசினியாகிக் கல்கத்தாவை வந்தடைந்த அன்றும் சரி, அக்னெஸ், தெரேசாவாக மாறி, அன்பிற்கு ஓர் அன்னையாக உலகிடை விளங்கும் இன்றும் சரி, அவருக்கு நாடு நகரத்தின் ஏழைகளில் ஏழைகள்தாம் ஊர் உலகமாக இருந்தது; இருக்கின்றது! . . . . . அக்னெஸ், தன்னைப்போலவே ஒர் அன்னயாக எதிர் காலத்தில் விளங்கப் போகிருர் என்னும் உண்மையை அறிந்திருந்த அன்னே ஹல்க்ளி நதியும் புதுப்புனலின் கம்பீரத்துடனும், புதுவெள்ளத்தின் ஆரவாரத்தோடும் அன்பும் ஆனந்தமும் முழங்க அப்பொழுது தியாகசீலி அக்னெசை வரவேற்றிருக்க வேண்டும்! - - - - - --
பக்கம்:அன்னை தெரேசா.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை