44 ஆலுைம்அவருடைய இதயத்தின் இதயம், ஏழைகளிலே மிக மிக ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்று ஆண்டவன் தனக்கு முன்னர் விடுத்த முதல் அழைப்பைச் சுற்றிச் சுற்றி அலேந்து கொண்டிருந்தது; அலைபாய்ந்து கொண் டிருந்தது!.கல்கத்தா நகரின் வரலாறு தழுவிய சிறப்பையும், மரபு சார்ந்த பெருமையையும் அலைக்கழிக்கும் வகையில், நகரின் பெரும்பான்மையான பகுதிகளிலே வகுப்புவாத வெறிக்கு ஊடாக, ஊடும் பாவுமாகத் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த வறுமையும், பசியும் அவரை வெகுவாகச் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தன. நாள் ஆக ஆக, "என் குடன் பணி செய்து கிடப்பதுதான்! கடைத்தேற வழி இன்றியும் வசதியாக இல்லாமலும் நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிற-அல்லும் பகலும் பிழைத்துப் பிழைத்துச் செத்துக் கொண்டிருக்கிற ஏழைகளுக்குச் சேவை செய்து உதவக் கூடிய நல்வாய்ப்பு ஏற்பட்டால்தான்-கர்த்தர் பெருமானின் முதலாவது ஆணையை-அன்பின் முதல் கட்டளையை நான் அன்பு பிறழாமல் நிறைவேற்றியவளாகவும் ஆக முடியும் அல்லவா?’-இவ்வாருக, உள்ளுணர்வுகள் ஓயாமல் அரித் தன; ஒழியாமல் நச்சரித்தன!-அக்னெஸ் தவித்தார். நெஞ்சின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன: பள்ளிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு பிராயத்திலேயே நான் கன்னிகாஸ்திரியாய் ஆக ஆசைப்பட்டேன். காலம் வளர வளர, நானும் வளர்த்தேன்; அன்பும், இரக்கமும், பரிவும், பாசமும் கடவுளின் கடாட்சத்தினல் இயல்பிலேயே நிரம்பி நிரம்பி வழிந்த என்னுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் நீ உன் அயலவர்களை நேசி; உன்னை இயேசு நேசிப்பார்!’ என்னும், வேதமொழி, அடிக்கடி ஒலித்தது; எதிரொலித்தது. என் மனம் பக்குவப்படத் தொடங்கின நிலையில், ஓர் இனிய பொழுதில், என்னுடைய உள் மனத்தில்,
பக்கம்:அன்னை தெரேசா.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை