45 ஆண்டவரின் குரலாகப் புதிய ஆணையொன்று பிறந்தது!நடப்பு உலகிலே, சமூகத்தின் கீழ்த் தட்டிலே தேங்கிக் கிடந்து, வாழ்க்கையோடு pவமரணப் போராட்டம் நடத்திக் களைத் து, அன்பிற்காக ஏங்கித் தடுமாறித் தவித்துக் கொண்டிருக்கிற அ ன ைத மக்களுக்கு அன்பை வாரிவாரி வழங்குவதில் நானும் என் பங்குப் பணியைச் செய்தாக வேண்டுமென்று என்னுள்ளே பீறிட்டுக்கிளர்ந்தெழுந்த அந்த இலட்சியத்தின் கனவை என்னை ஆளுகின்ற ஆண்டவனின் கட்டளையாகவே மதித் தேன். என்னுடைய பரிசுத்தமான, தன்னலமற்ற குறிக் கோளே ஈடேற்ற அருள் புரியுமாறு பரம பிதாவை இறைஞ்சினேன்; என் பிரார்த்தனையைக் கர்த்தர் ஆசீர் வதித்ததாகவும் என்னுடைய உள்ளுணர்வு சொல்லிற்று. அன்பிற்குத் தூது செல்லும் மக்களின் கேடிமப் பணியில் ஒரு தியாகக் கன்னிகையாகமாறி, என்னை நானே முற்றி லும் ஈடுபடுத்திக் கொள்ளவும் முடிவு எடுத்தேன். பெற்றவர்களை மறந்து, பெற்ற பூமியையும் துறந்தேன். நான் விரும்பின மாதிரி, இங்கே கல்கத்தாவில் சேவை செய்து வந்த லொரெட்டா மடத்துக் கன்னிமார்களின் குழுவில் நானும் ஒருத்தியாக இணைந்தேன்; ஆல்ை. ஆளுல்...?-’ அக்னெஸ் விம்மி வெடிக்கிருர்: மக்களுக்காகவும் மக்களின் அன்புக்காகவும் தம்மையே அர்ப்பணம் செய்து, ஓங்கி உயர்ந்து, உலகை அளந்த உத்தமர்க்ளின் அணியில் நானும் ஒருத்தியாக அங்கம் வகிக்க வேண்டுமென்று விருப்பப்பட்ட என் இலட்சி யத்தைப் பரிவுடன் அங்கீகரிப்பவர் போன்று, "அப்படியே செய்வாய், மகளே!' என்று அன்புடன் ஆணையிட்ட அன்பே வடிவான என்னுடைய தந்தைத் தெய்வத்தின்தெய்வத் தந்தையின் அந்த முதற் கட்டளையை நான் என்றைக்குத்தான் நிறைவேற்றி வைக்கக்கூடிய பாக்கி யத்தைப் பெறப் போகிறேனே?-தெரியவில்லையே?.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை