46 நான் அன்று கண்ட கனவு என்ன? இன்று நான் காணும் நனவு என்ன?-எனது இலட்சியக் கனவு நனவாகாமல், வெறும் ஆசிரியை ஆகி இந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே நானும் என் கனவைப்போலவே சிதைந்து அழிந்து போய் விட வேண்டியதுதானே? - ஐயையோ!-இப்படிப்பட்ட அவல முடிவை என்னல் நினைத்துப் பார்க்கக்கூட முடிய வில்லையே?’ - நினைவுகள் புலம்பின! அக்னெஸ் உருகிளுர், உருகிளுர்; உருகிக் கொண்டே யிருந்தார்! 'பரம பிதாவே! எனக்கென்று ஒரு மனத்தைக் கொடுத்தீர்கள்; அந்த மனத்திற்கெனவும் என்னுடைய விருப்பத்திற் கெனவும், முதல் ஆணையையும் இட்டீர்கள்!தந்தையின் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டியது மகளின் கடமை ஆயிற்றே? - இந்தப் பாவியையும் ரட்சியுங்கள், தந்தையே! எண்ணி முடியாத, எண்ணவும் முடியாத ஏழைகளோடு ஏழையாக வாழவும், வாழ்ந்து காட்டவும் எனக்கு ஒரு விடியல் வேளையினைக் காட்டுங்கள், ஏசு பிரானே!...” - கன்னிப்பூவாம் அக்னெஸ் பக்திச்சுவை சொட்டச் சொட்டத் தொடுத்து, மெழுகுவர்த்தியின் ஒளிக்கு நடுவில் பேரொளியாகப் பொலிந்த சிலுவைத் தெய் வத்துக்குச் சூடிய-சூட்டிய கண்ணிர் மாலையின் துரிய நறுமணம் இப்போது நாளும் பொழுதும் வளர்ந்தது; வளர்ந்து கொண்டேயிருந்தது!... - - இயேசுநாதர், இதோ அழைக்கின்ருர் : § { பசியாய் இருந்தேன்: எனக்கு உண்ணக்கொடுத்திர்கள்; தாகமாக இருந்தேன்;
பக்கம்:அன்னை தெரேசா.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை